Connect with us
kayadu

Cinema News

அந்த நடிகருடன் ஜோடி போடும் கயாடு லோஹர்!.. பிரேக்கப் ஆகாம பாத்துக்க செல்லம்!…

Kayadu Lohar: புனேவில் வசித்து வருபவர் கயாடு லோஹர். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார்.

கயாடு லோஹர் முதன் முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழி படங்களில் நடிக்க துவங்கினார். டிராகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கிறார். முதல் படத்திலேயே எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இத்தனைக்கும் டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகவே கயாடு லோஹர் நடித்திருப்பார். படம் வெளியான போது ரசிகர்களிடம் இவர் பிரபலமாகிவிட டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என எங்கு போனாலும் இவரின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து இவரின் அழகை வர்ணிப்பது போல ஜொள்ளுவிட்டு கொண்டிருந்தார்கள்.

இதைப்பார்த்து மனம் நெகிழ்ந்து போன கயாடு லோஹர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு வீடியோவையே வெளியிட்டார். டிராகன் படம் 140 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, பல இளம் நடிகர்கள் காயாடுவுடன் ஜோடி போட ஆசைப்படுகிறார்கள்.

silambarasan

ஏற்கனவே அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் சிம்புவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இது சிம்புவின் 49வது திரைப்படமாகும்.

சிம்பு தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை காதலிக்கும் பழக்கம் கொண்டவர். ஏற்கனவே, நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு பேரை காதலித்து பிரேக் அப் ஆனவர். எனவே, ‘சிம்பு உன்னை காதலிப்பார். பிரேக்கப் ஆகாம பாத்துக்கோ’ என ரசிகர்கள் இப்போதே கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top