Connect with us
cololie

Cinema News

திடீர் தளபதிக்கு ஆப்பு வைத்த ரஜினி!.. மதராஸி ரிலீஸுக்கு வந்த சிக்கல்!…

Madharasi: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து மெரினா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் முன்னனி நடிகர்களில் ஒருவராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சி, உழைப்பு மற்றும் வெற்றிகளால் சினிமாவில் வளர்ந்தவர் இவர்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையே பொறாமைப்பட வைத்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் யாருமே சிவகார்த்திகேயனுடன் நட்போடு பழகுவதில்லை. இப்போது சூழல் கொஞ்சம் மாறியிருக்கிறது. பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வாவும், ரவி மோகனும் நடித்து வருகிறார்கள்.

madharasi

#image_title

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது. ஒருபக்கம் கோட் படத்தில் தன்னுடைய துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுத்துவிட்டு போவது போலவும் காட்சியை வைத்து விட்டார் வெங்கட்பிரபு.

எனவே, விஜயின் இடம் சிவகார்த்திகேயனுக்குதான் எனவும் பலரும் பேச துவங்கிவிட்டனர். புளூசட்ட மாறன் போன்ற சிலரோ சிவகார்த்திகேயனை ‘திடீர் தளபதி’ எனவும் நக்கலடித்து வருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இப்போது சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. விரைவில் மதராஸி படமும் முடிந்துவிடும்.

மதராஸி படத்தை ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படம் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளதால் ஜூலை மாதமே படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறது மதராஸி படக்குழு.

இதையும் படிங்க: கூலி படத்திற்கு வந்த சிக்கல்!. அதுவும் அந்த நடிகராலயா?!.. ரிலீஸ் தேதி தள்ளி போகுமா?!..

google news
Continue Reading

More in Cinema News

To Top