
Cinema News
நீங்களே கேக்குறீங்க!.. நீங்களே அடிக்குறீங்க!.. விருது விழாவில் கோபப்பட்ட மணிகண்டன்!..
Manikandan: சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நடிகனாக மாறியிருப்பவர் மணிகண்டன். இவர் நடிப்பில் வெளியான குட் நைட்,லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் போன்ற படங்கள் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றிருக்கிறது. சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என முடிவெடுத்த மணிகண்டன் அதற்காக அதிர்ஷ்டத்தை நம்பவில்லை.
சினிமாவுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டார். புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, நல்ல சினிமாக்களை பற்றி விவாதிப்பது என தன்னை கூர்மைப்படுத்திகொண்டார். மணிகண்டனை ஒரு மிமிக்ரி கலைஞராகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால், கதை எழுதுவார், நடிப்பார், படம் இயக்குனார், நல்ல படங்களை பற்றி ஆழமாக பேசுவார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு புரியும்.
நரை எழுதும் சுயசரிதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஸ்வாசம், விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். நிறைய படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். ஒருபக்கம், நிறைய படங்களில் நடிகர்களுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக இருந்திருக்கிறார்.
இதுபோக பல ஹாலிவுட் கார்டூன் படங்கள் தமிழில் டப் செய்யும்போது விலங்குகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இப்படி பல ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்து வரும் ஒரு திறமையான இளைஞராக இருக்கிறார் மணிகண்டன். ஆனால், இவரை யார் பேட்டி எடுத்தாலும் சரி, திரைப்படங்கள் தொடர்பான மேடையில் இவர் ஏறினாலும் சரி எல்லோருமே இவரை மிமிக்ரி செய்யசொல்லி கேட்பார்கள்.
அவரும் கேட்கிறார்களே என ஏதோ ஒரு நடிகரின் குரலில் பேசி விட்டு போய்விடுவார். குடும்பஸ்தன் படம் வெளியான நேரத்தில் பல பல ஊடகங்களுக்கும் மணிகண்டன் பேட்டி கொடுத்தார். அப்போது டெல்லி கணேஷ், அஜித் உள்ளிட்ட பலரின் குரலிலும் பேசி காட்டினார். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய மணிகண்டன் ‘நீங்க பாட்டுக்கு மிமிக்ரி மிமிக்ரினு கேட்டு போயிடுறீங்க. அப்புறம் நீங்களே கமெண்ட்ல வந்து இவன் ஸ்டேஜ் ஏறினாலே மிமிக்ரிதான் பண்றான்னு சொல்றீங்க. நீங்களே மிமிக்ரி பண்ன சொல்லி நீங்களே அடிக்கிறீங்க.. மனுஷங்களாடே ஏய்’ என ஜாலியாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: திடீர் தளபதிக்கு ஆப்பு வைத்த ரஜினி!.. மதராஸி ரிலீஸுக்கு வந்த சிக்கல்!…