அந்தப் படத்த பார்த்து என் பொண்டாட்டி காரி துப்பிட்டு போயிட்டாங்க.. விமல் சொன்ன படம்

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிகவும் யதார்த்தமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விமல். கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர். கூத்துப்பட்டறையில் இருக்கும் பொழுது விதார்த், விஜய் சேதுபதி இவர்கள் எல்லோரும் நண்பர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் கூட்டத்தில் விமல் தான் ஒரு ஹீரோவாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறார். அந்த அளவுக்கு கலராகவும் அழகாகவும் இருந்திருக்கிறார் விமல்.

ஆனால் இப்போது விஜய் சேதுபதி எந்த ரேஞ்சுக்கு போய்விட்டார் என்பது அனைவருக்குமே தெரியும். சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் பொழுது தான் கில்லி பட வாய்ப்பு விமலுக்கு வந்திருக்கிறது. அதில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்தார். அதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அஜித்துடன் கிரீடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதிலும் ஒரு துணை நடிகராக தான் நடித்தார்.

இந்த இரண்டு படங்களில் நடிக்கும் பொழுது தான் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என அனைவரும் தெரிந்து கொண்டனர். அதன் பிறகு ஹீரோவாக நடித்தால் என்ன என்ற ஒரு எண்ணம் விமலுக்கு வர களவாணி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் விமல். அந்த படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பு பேச்சு என அனைவரையுமே ஈர்த்தது. அதிலிருந்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டார் விமல்.

இப்போது அவர் பரமசிவன் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் தற்போது நடந்து வருகிறது. வாழ்க்கையில் ஏகப்பட்ட துரோகத்தை பார்த்திருக்கிறேன். நிறைய பேர் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் சொல்லும் விமல் ஒரு படத்தை தயாரிக்கவும் செய்தார். ஆனால் அது அவருக்கு போதிய வசூலை தரவில்லை. ஏகப்பட்ட கஷ்டங்களை தாண்டி இப்பொழுது தான் ஒவ்வொரு படங்களின் வாய்ப்பும் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றது.

vimal

vimal

இந்த நிலையில் அவர் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ திரைப்படம் பற்றி அவர் பேசுகையில் இந்த படத்தைப் பார்த்து என் பொண்டாட்டி காரி துப்பிட்டா என்று கூறினார் விமல். ஏனெனில் ஹீரோயினுடன் மிகவும் நெருக்கமான காட்சி. இந்த படத்திற்கு பிறகு இனி இந்த மாதிரி படங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்தேன். அதுக்குன்னு வேற படங்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு இனி இந்த மாதிரி படங்கள் வேண்டாம் என்று முடிவு எடுத்து இப்போது வேறொரு ஜானரில் படம் நடித்து வருகிறேன் என்று விமல் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.அ

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment