
Cinema News
பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம்…. மூவரில் அந்த விஷயத்துல கெத்து யாரு?
தமிழ்த்திரை உலகில் 80களில் தொடங்கி நீண்டகாலமாக லெஜண்ட் இயக்குனர்கள் ஆக இருந்தவர்கள் யார் என்றால் அது பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம் ஆகியோர் தான். இந்த மூவரில் மிக அதிகமான இயக்குனர்களை உருவாக்கியவர் யாருன்னு பார்க்கலாமா…
பாலசந்தரின் உதவி இயக்குனர்களாக வசந்த், சேரன், சரண், அனந்து மற்றும் சமுத்திக்கனி ஆகியோர் உள்ளனர். வசந்த் பாலசந்தரின் சிந்து பைரவி மற்றும் புன்னகை மன்னன் படங்கள் உள்பட 18 படங்களில் பணியாற்றியுள்ளார். சேரன் தான் அவரிடம் இருந்து வெளிவந்த முதல் வெற்றிகரமான இயக்குனர்.
அதே போல சமுத்திரக்கனி பார்த்தாலே பரவசம், பொய் அகிய படங்களில் பாலசந்தரின் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். சரண் கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். பாலசந்தரின் பல படங்களுக்கு அனந்து திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

bhagyaraj
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்களாக இருந்து இயக்குனர்கள் ஆனவர்கள் பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, ரங்கராஜ் மற்றும் பொன்வண்ணன். அதே போல பாக்கியராஜிடம் இருந்து பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இயக்குனர்களாக வந்தனர். இயக்குனர் வி.சேகரும் பாக்கியராஜிடம் இருந்து வந்தவர் தான். மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் சுதா கே.பிரசாத், ஆதித்யா அன்பு, வி.பிரியா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.
இவர்களில் சுதா கே.பிரசாத் யுவா, ஆயுத எழுத்து, குரு ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு துரோகி படத்தில் இயக்குனர் ஆனார். ஆதித்யா அன்பு தக் லைஃப் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் பணியாற்றியுள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தக் லைஃப் படத்தில் பணியாற்றியுள்ளார். இவர் கமல் மற்றும் மணிரத்னம் ஆகியோரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார்.
அந்த வகையில் இந்த 3 இயக்குனர்களில் மிக அதிகமான இயக்குனர்களை உருவாக்கிய பெருமை இயக்குனர் இமயம் பாரதிராஜாவையேச் சேரும். இந்தத் தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனே தெரிவித்துள்ளார்.