Connect with us

Cinema News

இது நடந்தா காப்பாற்றி இருக்கலாம்!.. ராஜேஷ் மரண பின்னணியில் பகீர் தகவல்!…

நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறலால் இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ்த்திரை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு. அந்த வகையில் அவரைப் பொருத்தவரை ஏராளமான புத்தகங்களைப் படிப்பவர். நாத்திகர். ஜோதிடத்தில் நாட்டமுள்ளவர். எழுத்தாளர். 9 புத்தகங்களை எழுதியுள்ளார். சித்த மருத்துவத்தில் நாட்டம் உள்ளவர். முக்கியமாக இவர் எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவர்.

பன்முகத்திறன் கொண்டவர். அவருக்கு வயது 75. அவரே பலருக்கும் ஆரோக்கியமாக வாழ டிப்ஸ் கொடுத்துள்ளார். அவருக்கு எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லை. அப்படி என்றால் ஏன் இப்படி ஒரு மரணம் வர வேண்டும் என்ற கேள்வி எழலாம். மனைவியின் பிரிவு, தனிமை தினமும் அவரை அழுத்திக் கொண்டே இருக்கும்.

எந்த நேரமும் தனிமையாக இருக்கும்போது ஒரு மனிதன் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவான். அது கூட நடந்து இருக்கலாம் என்கின்றனர். அதே நேரம் மரணத்தை அவர் முன்பே கணித்தும் உள்ளார். 75 வயதுக்கு மேல் மனிதன் உயிர் வாழ்வது அநாகரிகம். ஆரோக்கியமாக இருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்று சொல்வாராம்.

அதுதான் இப்போது அவரது விருப்பப்படி நடந்ததாகவும் சொல்கின்றனர். அவரது தம்பி ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா…

ராஜேஷூக்கு திடீர் அசவுகரியம் ஏற்பட்டபோது வீட்டுக்கு சித்த மருத்துவர் வந்தார். அவர் கதை பேசிக்கொண்டே இரண்டு மணி நேரத்தை இழுத்தடித்தார் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார் தம்பி. காலை 6 மணிக்கு எல்லாம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருந்தால் ராஜேஷைக் காப்பாற்றி இருக்கலாம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முதலே வீஸிங் இருந்ததாம். அதன்பிறகு மருத்துவரை அழைக்கச் சொன்னாராம் ராஜேஷ். அதன்பிறகு வேணாம் என்று சொல்லிவிட்டு காலையில் மீண்டும் மூச்சுத்திணறல் வரவே தம்பி ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். ஆம்புலன்ஸிலேயே கண்கள் மேலே சொருகியதாம் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே ராஜேஷ் இறந்து விட்டதாகவும் வருத்தத்துடன் தம்பி தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top