Connect with us

Cinema News

அடுத்த வாரம் மகனுக்கு நிச்சயதாத்தம்!. ராஜேஷ் குடும்பத்தினருக்கு இப்படியா?

Actor Rajesh: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். துவக்கத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தவர் இவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர் என்பதால் அவரைப் போலவே நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் முயற்சிகள் செய்தார்.

பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் பல வருடங்கள் கழித்து கன்னிப்பருவத்திலே படத்தில் இவருக்கு கதாநாயகன் வேடம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் நல்ல வேடமாக இருந்தால் வில்லனாக கூட நடித்தார்.

அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், சின்னத்திரை நடிகர் என பல முகங்களை கொண்டவர் இவர். தனியாக யுடியூப் சேனல் துவங்கி அதில் ஆரோக்கியம் தொடர்பான பல தகவல்களை பகிந்துகொண்டார்.

பல மருத்துவர்களிடமும் பேட்டி எடுத்து வீடியோக்களை ஒளிபரப்பி மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தார். கடந்த 45 வருடங்களில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் 10க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்தார். இவரின் மகள் திவ்யா கனடாவில் வசித்து வருகிறார்.

இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘எனக்கும் ராஜேஷ் சாருக்கும் பல வருட நட்பு உண்டு. ஐசரி கணேஷ் திருமணத்தில் அவரை சந்தித்தபோது ‘99 வயது வரை எப்படி வாழ வேண்டும் என உங்களுக்கு சொல்லித்தருகிறேன். என் வீட்டுக்கு வாருங்கள்’ என சொன்னார். ஆனால், அவர் மரணமடைந்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

நாங்கள் சந்தித்தாலே ஆரோக்கியம் பற்றித்தான் பேசுவோம். அவரின் மகனுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இந்த சூழ்நிலையில் அவர் மரணமடைந்தது அவரின் குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துவிட்டது’ என பேசியிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top