Cinema News
அந்த விஷயத்துல தக் லைஃபை மிஞ்சிய கூலி..!. இப்பவும் ரஜினி – கமல் போட்டிதானா?..
பெரிய இயக்குனர்கள் இந்த ட்ரெண்டுக்குப் படம் பண்ண முடியல. ஷங்கர் இயக்கிய படங்களே ப்ளாப் ஆகி வருகின்றன. ஆனால் மணிரத்னம் இயக்கியுள்ளார். அது இப்ப உள்ள ரசிகர்களைக் கவருமா என்ற கேள்விக்கு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி இப்படி பதில் சொல்கிறார்.
தக் லைஃப் கமர்ஷியல் படம். அதே நேரம் இந்தத் தலைமுறையை ஈர்க்கிற படமாக இருக்குமான்னு கேள்விக்குறி எழுகிறது. இந்தியன்; 2 கூட ஒரு கமர்ஷியல் படம்தான். ஆனா இந்தத் தலைமுறையினர் அதைக் கிரின்ஜ்னு தள்ளிட்டாங்க.
அந்த ஆபத்து இந்தப் படத்துலயும் இருக்கு. அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது படம் பார்த்தால் தான் தெரியும். கூலி படம் வரும்போதுதான் தக் லைஃப்புக்குக் கிடைச்சிருக்குற இந்த வரவேற்பு அதற்கும் இருக்கிறதா என தெரிய வரும். எல்லாத்துக்கும் மேல கூலி லோகேஷ் கனகராஜின் படம். அது வெறும் ரஜினி படம் மட்டுமல்ல.
இங்கே பார்க்கும்போது மணிரத்னம் ஒரு சீனியர் இயக்குனர். கமல் ஒரு சீனியர் நடிகர். அதனால வரவேற்பு கம்மியா இருக்குமான்னு ஒரு கணக்குக்கு எடுத்துக்கிடலாம். அப்படிப் பார்க்கும்போது கூலிக்கான வரவேற்புக்கு ரஜினி மட்டுமே காரணமல்ல.
கமல் ஒரு சீனியர் நடிகர்னு ஒதுக்குறாங்கன்னா அதே பார்வை தானே ரஜினிக்கும் இருக்கும். அங்கே மட்டும் ஏன் நிறைய வரவேற்பு இருக்குன்னா இங்கே லோகேஷ் கனகராஜ் என்ற இளைஞர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமா ஒருத்தர் இருக்காரே என்பதுதான். எல்லாத்துக்கும் மேல படம் வந்ததுக்கு அப்புறம்தான் சொல்ல முடியும் என்கிறார் பிஸ்மி.

தக்லைஃப், கூலி இரு படங்களுமே இந்த ஆண்டின் மாஸ் தான். அந்த வகையில் இந்தப் படங்களை ஒன்றாக ரிலீஸ் ஆக்கவில்லை. இப்;போதே வரவேற்பு, எதிர்பார்ப்பு என போட்டி வருகிறது. படத்தை மட்டும் ஒரே நாளில் ரிலீஸ் பண்ணினால் ரசிகர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டாலும் ஆச்சரியமில்லை. தவிர இந்த இரு ஜாம்பவான்களுக்கும் இப்பவும் அதே கெத்து ரசிகர்கள் மத்தியில் இருப்பது வியப்புக்குரிய விஷயம் என்றே பார்க்கப்படுகிறது.