Connect with us

Cinema News

அஜித் அப்படி பேசமாட்டார்.. அதனால் கூட்டம் சேரும்! ஆனா விஜய்? உடைத்து பேசிய ராதாரவி

விஜயின் அரசியல் வருகை பற்றி நடிகர் ராதாரவி அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது விஜய்க்கு கூடிய கூட்டம் தானாக சேர்ந்த கூட்டமா அல்லது அவருடைய சினிமா பிரபலத்தால் வந்த கூட்டமா என்ற ஒரு கேள்விக்கு ராதாரவி பதில் கூறியிருக்கிறார். அது அரசியலுக்கு சேர்ந்த கூட்டம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் ஒரு தேர்தல் வந்து அதில் வரும் முடிவுகளை வைத்து தான் கூட்டம் எப்படிப்பட்ட கூட்டம் என்பதை நம்மால் கணிக்க முடியும்.

ரஜினியை பார்க்க எவ்வளவு கூட்டம் கூடுகிறதோ அதைப்போல இப்போது விஜய்க்கும் கூடுகிறது. அஜித்துக்கும் கூட்டம் சேரும். ஆனால் அஜித் சார் படம் சரியாக ஓடவில்லை. இது ஓடவில்லை என்ற விமர்சனம் வந்தாலும் அவருக்கு கூட்டம் சேருகிறது. அதற்கு காரணம் அவருடைய பல நல்ல நடவடிக்கைகள். அவர் எதுவும் வார்த்தைகளை விட மாட்டார். ஆனால் விஜய் அரசியல் என்று சொன்னதினால் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசியாக வேண்டும்.

ஆனால் அவர் பேசுகிற பேச்சு என்பது போதாது என பல பேர் நினைக்கிறார்கள். குறிப்பாக அவர் மீட்டிங் என்ற ஒரு விஷயத்திற்குள்ளேயே வரமாட்டார் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. இதுவரை பத்திரிக்கையாளர் மீட்டிங் நடக்கவே இல்லை. அதே போல் அவருக்காக மற்றவர்கள் பேசலாம். ஆனால் அவருக்காக அவர்தான் பேச வேண்டும். சில பேர் அவர் எழுதிவைத்து பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் பேசும் பேச்சு அவராகத்தான் பேசுகிறார். அவரை பார்ப்பதற்காகவே கூட்டம் வருகிறது. இது ஓட்டாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. புரட்சித்தலைவருக்கும் அப்படி இருந்தது. எம்ஜிஆர் திமுகவில் இருந்து திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு திரளான கூட்டம் கூடுகிறது. அந்த கூட்டத்தில் நான் ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி என்று கூறினார்.

கூட்டத்தை பார்க்கும் போது ஒருவேளை ஜெயித்துவிடுவாரோ என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். அதே போல் ஜெயித்தார். அந்த கூட்டம் ஓட்டாக மாற வேண்டும். அப்படித்தான் விஜய்க்கும் மாற வேண்டும். மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஏமாற்றமாக இருக்க கூடாது என ராதாரவி கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top