Connect with us

Gossip: மகளுக்காக இப்படி இறங்கி போறாரே மிஸ்டர் பிரம்மாண்டம்.. விதி யாரை விட்டுச்சு!

latest news

Gossip: மகளுக்காக இப்படி இறங்கி போறாரே மிஸ்டர் பிரம்மாண்டம்.. விதி யாரை விட்டுச்சு!

Gossip: தான் உண்டு தன்னுடைய டைரக்‌ஷன் என இருந்த வரை ஒழுங்காக தான் இருந்து வந்தார் மிஸ்டர் பிரம்மாண்டம். ஆனால் அவரின் மகளை எப்போ சினிமா பக்கம் வந்தாரோ எல்லாமே பிரச்னையாக மாறி விட்டது.

தமிழ் சினிமாவில் ஓவர் பட்ஜெட்டில் படம் எடுக்கும் டைரக்டர் என்றால் அந்த மிஸ்டர் பிரம்மாண்ட இயக்குனர் தான். அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய செலவை தயாரிப்பாளருக்கு இழுத்து விடும். ஆனால் அதை கூட அவர்கள் பொறுத்து கொள்வார்கள்.

ஏனெனில் அந்த இயக்குனர் செலவை இழுத்து வைத்தாலும் கூட வருமானத்தினை கொடுத்து விடுவார் என்பதால் அவர் கேட்டதை எல்லாமே செய்து வந்தனர். அவரும் பெரிய பட்ஜெட்டை போட்டு இதுவரை உலக மேப்பில் இல்லாத இடத்துக்கு கூட ஷூட்டிங் சென்று வந்துவிட்டார்.

அவரின் வாரிசு நடிகை படத்துக்கு வந்த பின்னர் எல்லாமே மாறிவிட்டது. முதல் படத்தில் அம்மணியை நடிக்க வைக்க பலரிடமும் திரை மறைவில் வாய்ப்பு கேட்டு அதை ஓகே செய்து அவரை நடிப்பில் இறக்கினார். பெரிய கூட்டணி என்பதால் மகள் முதல் படத்திலே வளர்ந்து விடுவார் என நம்பினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு அங்கே தொடங்கியது பிரச்னை. தொடர்ந்து அந்த திடீர் ஸ்டார் படத்திலும் வாய்ப்பு வாங்கி கொடுத்தால் அங்கே பாட போறேன் என ஒரு பிரச்னையை இழுத்து வைத்தார். அந்த படம் ஓடினாலும் அம்மணிக்கு வாய்ப்பே வரவில்லை.

இவரும் தலைகீழாக நின்னாலும் அது நடக்காமல் போக தெலுங்கு பக்கம் மகளுக்கு வாய்ப்பு தேடிய போது தான் அவருக்கு அந்த தெலுங்கு ஸ்டாரை இயக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் வந்ததாம். அதனால் அவரும் ஓகே சொல்ல படம் பெரிய செலவை இழுத்து வைத்தாலும் வருமானத்துக்கு வேலை இல்லாமல் போனது.

இந்த மன உளைச்சலில் தற்போது அவர் இயக்கும் எல்லா படங்களிலுமே கோட்டை விட இப்போது இவரை மிஸ்டர் பிரச்னை என கலாய்க்கும் அளவுக்கு திரையுலகத்தினர் வந்து இருக்கின்றனர். இதில் இவரின் மகனும் நடிகனாக களம் இறங்க வாய்ப்பு இருக்காம். முடிச்சிவிடாம போக மாட்டாங்க போலயே என பேச்சுகள் எழுந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top