Connect with us

Bigg Boss

இரட்டை பெண் குழந்தைகளின் முகங்களை வெளிக்காட்டிய சினேகன்!.. அப்பாவுக்கு ஒரே பூரிப்புதான்!..

சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகளுக்கு இந்த ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. காதலர் தினத்தன்று, கமல்ஹாசன் முன்னிலையில் குழந்தைகளுக்கு ‘காதல் கன்னிகா சினேகன்’ மற்றும் ‘கவிதை கன்னிகா சினேகன்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. கமல்ஹாசன் குழந்தைகளுக்கு தங்க வளையல்களையும் அணிவித்து வாழ்த்தினார். இந்நிலையில் சினேகன், தனது குழந்தைகள் பிறந்து 5 மாதங்களுக்கு பிறகு தற்போது அவர்களின் முகத்தை காட்டியுள்ளார்.

சினேகன் ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி சென்னைக்கு வந்த பிறகு, புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார். இந்த அனுபவம் அவரது பாடலாசிரியர் பயணத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

2000ஆம் ஆண்டு புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 2500ற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், யோகி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, அதில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். தமிழ்நாடு மாநில விருது உட்பட பல விருதுகளையும், கவிச்சிற்பி, சின்ன பாரதி, எழுச்சி கவிஞர் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்

பின்பு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து மக்களவைத் தேர்தலிலும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராகப் போட்டியிட்டார். மேலும், முதல் அத்தியாயம், இப்படியும் இருக்கலாம் போன்ற ஐந்து புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இன்று சினேகன் தனது இரட்டை பெண் குழந்தைகளின் முகத்தை முதல் முறையாக சமுக வலைதளம் வாயிலாக காட்டியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அதில், எங்கள் அன்பிற்குறிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்கள் மகள்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் என பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top