யோகி பாபுவால்தான் ஏஸ் படம் ஓடல!.. இதுவே அவரா இருந்தா!. இப்படி சொல்லிட்டாரே!…

Published on: August 8, 2025
---Advertisement---

Ace Movie: சினிமாவில் போராடி மேலே வந்தவர்தான் பாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலில் ஒருவராக நின்று கொண்டிருந்த ஒருவர் இவர். இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்த பின் இவர் யோகி பாபு என மாறிவிட்டார். சூரி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடி வேடங்களில் கலக்கி வந்தபோது இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, சில காட்சிகளில் நடிக்கும் வேடங்களில் நடித்து வந்தார். அப்படி பல படங்களிலும் நடித்திருக்கிறார். அதில், சில காமெடிகள் ரசிகர்களிடம் பிரபலமானது. ஒரு கட்டத்தில் சந்தானமும், சூரியும் ஹீரோவாக நடிக்கப்போய்விட்டனர். வடிவேலுவும் 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அப்போது யோகி பாபுவை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலை உருவானது.

எனவே, அதை பயன்படுத்திக்கொண்டு பல படங்களிலும் நடித்து கல்லா கட்டினார் யோகி பாபு. ஆனால், சந்தானம், வடிவேலு போல யோகி பாபுவால் காமெடி செய்ய முடியவில்லை. அவர் நடிக்கும் காட்சிகளில் யாருக்கும் சிரிப்பும் வரவில்லை. ஆனால், அவரை விட்டால் வேறு யாருமில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் அவரையே படங்களில் நடிக்க வைத்தார்கள்.

இதில், பல படங்களில் அவர் கதையின் நாயகனாகவும் நடித்தார். அதில், மண்டேலா படம் மட்டுமே தேறியது. தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கும் யோகிபாபு சில படங்களில் ஒரு சில காட்சிகள் மட்டும் கூட நடித்தார். அந்த அளவுக்கு பிஸியான நடிகராக மாறினார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார்.

ஆனால், இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி ‘ஏஸ் படம் ஓடாமல் போனதற்கு காரணமே யோகி பாபுதான். இந்த படத்தில் படம் முழுக்க அவர் வருகிறார். ஆனால், நகைச்சுவை காட்சிகள் கொஞ்சம் கூட ரசிக்கும் படி இல்லை. அவரின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கவே இல்லை. இதுவே, சந்தானமாக இருந்திருந்தால் இந்த படம் ஹிட் அடித்திருக்கும்’ என சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் யோகி பாபு புரமோஷன் விழாவில் கலந்து கொள்ள 7 லட்சம் பணம் கேட்டார். அதை கொடுக்கவில்லை என்பதால் அவர் விழாவுக்கு வரவில்லை என தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் பேசினார். ஆனால், யோகி பாபு அதை மறுத்து ‘என்னை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்கள். எனக்கு வரவேண்டிய சம்பளமே நிறைய பாக்கி இருக்கிறது’ என பேசியது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment