Connect with us

Cinema News

அடுத்த நாசர் இவர்தான்.. தக் லைஃப் பட விழாவில் நடிகரை புகழ்ந்த கமல்

நேற்று தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் போன்ற பலர் நடித்துள்ள படம் தான் தக் லைஃப். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் போஸ்டர் பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார் சிறப்பு பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். கமலின் தீவிர ரசிகன் என்பதையும் மேடையில் காட்டினார். ஏற்கனவே கமலுக்காக மணிகண்டன், கௌதம் மேனன், லோகேஷ் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது இதில் சிவராஜ்குமாரும் இணைந்துள்ளார்.

அந்தளவுக்கு கமலின் தீவிர ரசிகராம் சிவராஜ்குமார். ஸ்ருதிஹாசன் படத்தின் விண்வெளி நாயகன் பாடலை நேரலையாக மேடையில் பாடி அனைவரையும் அசத்தினார். சிம்பு, திரிஷா என அனைவரும் அவரவர் அனுபவங்களை பகிர்ந்தார்கள். அதிலும் குறிப்பாக சிம்பு பேசும் போது கண்கலங்கி பேசினார். அவரது அப்பா டி. ஆரை நினைத்து மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார்.

ashokselvan

ashokselvan

இந்த நிலையில் கமல் கடைசியாக பேசும் போது நாசர் குறித்து பல விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக அசோக் செல்வனை பார்க்கும் போது நாசரை பார்த்த மாதிரி இருந்தது. படத்தில் போலீஸ் கெட்டப்பில் வரும் போது யார் இந்த பையன் என அனைவரும் கேட்பீர்கள். அந்தளவுக்கு அவருடைய கதாபாத்திரம் இருக்கும். நாயகன் திரைப்படத்திலும் நாசர் போலீஸ் கெட்டப்பில்தான் வந்திருப்பார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top