
Flashback
சில்க் ஸ்மிதாவுக்கு ரொம்ப பிடிச்ச ஆளுங்கன்னா அவங்கதானாம்… நடிகை ஓபன் டாக்!
80களில் கலக்கிய கவர்ச்சி கன்னி நடிகை சில்க் ஸ்மிதா. போதை ஏற்றும் கண்களைக் கொண்ட சில்க் ஒரு காலகட்டத்தில் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகி விட்டார். கவர்ச்சிக்கு என்றால் சில்க் தான். ஒரு பாடலுக்காவது ஆடுங்கன்னு காத்திருந்து தயாரிப்பாளர்கள் கால்ஷீட் வாங்கிச் செல்வார்களாம். அப்படிப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் இறுதிநாள்கள் சோகம் நிறைந்தவை. அவரைப் பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டரும், சீரியல் நடிகையுமான ஈசன் சுஜாதா பல அபூர்வ தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
சில்க் ஸ்மிதாவைப் பொருத்தவரை ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர்னு யாரையும் மதிக்க மாட்டார். ஆனா லைட்மேன், காபி கொடுக்குறவருன்னு சின்ன சின்ன தொழிலாளிகள் கிட்ட தான் நல்லா பேசுவார். ஏன்னா அந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டு இருந்தார் என நடிகை ஈசன் சுஜாதா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சில்க்கைப் பற்றிக் குறிப்பிடும் போது லைட்மேன், புரொடக்ஷன் பாய்னு சின்ன சின்ன ஆளுங்களை எல்லாம் ஷெட்ல பார்க்கும்போது அவங்களுக்கு லெமன் ஜூஸ் கொடுன்னு பாசமா பழகுவாங்க. அதே நேரம் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்தா கால் மேல கால் போட்டு உட்கார்ந்துருப்பார். அதுக்குக் காரணம் அந்தளவுக்கு அவருக்கு ஏற்பட்ட வலி என்கிறார் ஈசன் சுஜாதா.

#image_title
அது மட்டும் அல்லாமல் சில்க்கைப் பொருத்தவரை டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் சொல்லிக் கொடுப்போம். எங்கிட்ட அன்பா பழகுவார். ‘வீட்டுக்கு வா. மீன் கறி சமைத்து சாப்பிடுவோம்’னு சொல்வார். மேக்கப் போடும்போது கூட ‘உனக்கு ஒரு லிப்ஸ்டிக், எனக்கு ஒரு லிப்ஸ்டிக்’னு சின்னக் குழந்தை மாதிரி நல்லா பழகுவார். அவரு இறந்தது மர்மமாவே இருக்கு என மனம் கலங்கிப் பேசுகிறார் நடிகை ஈசன் சுஜாதா.
இவர் வானத்தைப் போல, சிறகடிக்க ஆசை சீரியல்ல நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர். சுஜாதா சின்ன வயசிலேயே டான்ஸைக் கற்றுக் கொண்டு மாஸ்டர் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.