
Cinema News
இரண்டு முறை லோகேஷ் கேட்டும் நடிக்க முடியல!.. ஃபீல் பண்ணும் அந்த நடிகர்!…
Coolie: திரைப்பட உலகில் எப்போதும் புதிது புதிதாக இயக்குனர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அதில் சில இயக்குனர்கள் டிரெண்ட் செட்டராக மாறுவார்கள். அவர்களுக்கென ரசிகர்கள் உருவாகுவார்கள். அந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் கூட ஆசைப்படுவார்கள். ஒரு கட்டத்தில் அப்படிப்பட்டவர்கள் சீனியர் இயக்குனர்களாக மாறிவிடுவார்கள். அதன்பின் புதிய இயக்குனர்கள் வருவார்கள். இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அப்படி இப்போது ஒரு டிரெண்ட் செட்டராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் மூலம் டேக் ஆப் ஆனார். கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தியது.
இதனால்தான் இவரின் இயக்கத்தில் ரஜினியே கூலி படத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்தியராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக 1986ம் வருடத்திற்கு பின், அதாவது 38 வருடங்களுக்கு பின் ரஜினியுடன் இணைந்து சத்தியராஜ நடித்துள்ளார்.
இப்போது பெரிய நடிகர்கள் படம் என்றாலே பேன் இண்டியா படமாக உருவாக்கப்படுகிறது. எல்லா மொழியிலும் வசூலை அள்ளுவதற்காக மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலிருந்து ஒவ்வொரு நடிகரை கூட்டிவந்து நடிக்க வைக்கிறார்கள். ரஜினியின் தர்பார் படத்திலும் இது நடந்தது.

#image_title
கூலி படமும் பேன் இண்டியா படமாகவே உருவாகியிருக்கிறது. இந்நிலையில், மலையாள நடிகரும், தமிழில் மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான பிரித்திவிராஜ் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். ‘இரண்டு முறை லோகேஷ் அவரின் படத்தில் நடிக்க என்னை அணுகினார். ஆனால், சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை. கூலி படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவருடன் பணியாற்ற மிகவும் ஆவலாக இருக்கிறேன். அது எப்போது நடக்கும் என தெரியவில்லை’ என சொல்லியிருக்கிறார்.
பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவாகியுள்ள தம்புரான் படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது. இது ஏற்கனவே பிரித்திவிராஜ் இயக்கிய லூசிபர் படத்தின் 2ம் பாகம் போல உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டார் ரஜினி. ஆனால், தொடர்ச்சியாக படங்கள் இருந்தால் பிரித்திவிராஜால் அப்படத்தை இயக்க முடியவில்லை.