Connect with us

Cinema News

திருமணத்தின் போது கேப்டன் என்னிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி.. கடைசி வரை செஞ்சுட்டாங்களே

கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் விஜயகாந்தும் பிரேமலதா விஜயகாந்தும்தான். அவர்களுடைய ஸ்டில்ஸை பார்க்கும் போது விஜயகாந்தை எந்தளவுக்கு பார்த்து பார்த்து கவனித்திருக்கிறார் பிரேமலதா என்று வியக்கத்தோன்றும். ஒவ்வொருமுறை சூட்டிங் கிளம்பும் போதும் அவருடைய சட்டையை போட்டு விடுவதே பிரேமலதாதானாம். இதை அவருடைய மகனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அப்படி ஆரம்பித்ததுதான் கடைசி வரை அரசியல் பொதுக் கூட்டம் வரை அப்பாவின் சட்டையை அப்பாவுக்கு போட்டு வழியனுப்பினார் அம்மா என்று சண்முகப்பாண்டியன் கூறினார். அதே போல் எங்கு உள்ளூரில் சூட்டிங் இருந்தாலும் காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது இன்று மதியம் என்ன உணவு வேண்டும் என்று முன்பே சொல்லிவிட்டு போவாராம் விஜயகாந்த்.

தன் உதவியாளர்களுடன் பிரேமலதா அவர் சொன்ன உணவுகளை சமைத்துவிடுவாராம். சமீபத்தில் கூட ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது பிரேமலதா ‘கணவன் மனைவிக்குள் ஒரு புரிதல் வேண்டும்’ என கூறியிருக்கிறார். அது இருந்தால்தான் கடைசி வரை ஒற்றுமையாக இருக்க முடியும். அது இல்லாததால்தான் சமீபத்தில் எத்தனை விவாகரத்து பிரச்சினைகளை பார்த்துவருகிறோம். அதுக்கு காரணம் அந்த புரிதல் இல்லாததால்தான் என பிரேமலதா கூறினார்.

முதன் முறையாக என்னை பெண் பார்க்க வரும் போது கேப்டன் என்னிடம் எனக்கு சாப்பாடு ஊட்டி விடுவீயா என்றுதான் கேட்டார். ஏனெனில் அவர் ஒரு வயது இருக்கும் போதே அவரது அம்மா இறந்துவிட்டார். தந்தையின் பாசம் என்ன என்பதே தெரியாமல்தான் வளர்ந்தார். அதனால்தான் அன்னையின் பாசத்தை என்னிடம் எதிர்பார்த்துகேட்டார். அன்றிலிருந்து கடைசி வரைக்கும் அவருக்கு நான் தான் ஊட்டி விடுவேன் என கூறினார் பிரேமலதா.

premalatha

premalatha

கேப்டன் எவ்வளவு கோபக்காரர் என்பது கட்சிக்காரர்களாகிய உங்களுக்கே தெரியும். எதுக்கும் சட்டென கோபப்படுவார். அப்படி இருப்பவருடன் இவ்வளவு நாள் நான் வாழ்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு புரிதல்தான் காரணம். 1990ல் அவருக்கு கழுத்தை நீட்டியதுமே இனி எல்லாமே அவருக்காகத்தான். அவருடைய சந்தோஷம் தான் என்னுடைய சந்தோஷம், அவருடைய சொல்தான் என்னுடைய சொல் என்றேதான் வாழ்ந்து வந்தேன். அதனால்தான் இவ்வளவு காலம் நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்தோம். அதனால் எல்லாரும் புரிதலோடு வாழ்ந்தால் இந்த மாதிரி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை போக வேண்டாம் என பிரேமலதா கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top