Connect with us

Cinema News

65வது பிறந்தநாளிலும் அடிபொலியாக இருக்கும் மோகன்லால்!.. அடுத்த அடுத்து வெளியாகும் பெரிய படங்கள்!

இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடிவரும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவரது அடுத்த படமான விருஷபா படத்தின் மோஷன் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மோகன்லால் தீரனோட்டம் என்ற படத்தில் அறிமுகமாக இருந்த நிலையில் அது சில பிரச்சனைகளால் வெளியாகவில்லை. அதையடுத்து மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பின்னர் 1986-ல் ராஜாவிண்டே மகன் படத்தின் மூலம் முன்னணி நடிகரானார். அவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் வெற்றிப்பெற்ற பின்னர் அவர் நடித்த மற்ற படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த ஆண்டு மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து மோகன்லால் நடித்த எம்புரான் வெளியாகி 250 கோடி வசூலை கொடுத்தது. அவர் அதை அடுத்து நடித்த “தொடரும்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கேரளாவின் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய் வரை வசூலை எட்டியது. இந்தப் படம் 25 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வணிக ரீதியாக வெற்றிப்பெற்றதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இயக்குநர் சத்யன் அந்திகட் இயக்கத்தில் ஆஷிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் மோகன்லால் நடித்து உருவாகியுள்ள ஹிருதயப்பூர்வம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், சங்கிதா பிரதாப், சித்திக், லால் அலேக்ஸ், பாபுராஜ், சங்கிதா, அருன் பிரதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மோகன்லாலின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 410 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு அவர் 10 கோடி முதல் 17 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார். சென்னை மற்றும் கேரளாவில் பிரமாண்டமான வீடுகள், மேலும், துபாயில் சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் வைத்திருக்கும் சொகுசுக்கார்களே ரூ 7 கோடி மதிப்புடையதாக இருக்கும் என கூறப்படுகிறது. மோகன்லால் திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், மற்றும் இயற்கை வேளாண்மை தோட்டம் போன்றவற்றிலும் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று 65வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிவரும் மோகன்லாலிற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் தனது இன்ஸ்டாகிராமில் ’விருஷபா’ படத்தின் போஸ்டரை ஷேர் செய்து, அதில் இது சிறப்பானது இதை எனது அன்பான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். காத்திருந்தது முடிந்து புயல் விழித்தெழுகிறது. பெருமையுடனும் சக்தியுடனும் உங்கள் ஆன்மாவை தூண்டி, காலத்தின் வழியாக எதிரொலிக்கும் ஒரு கதையான விருஷபாவின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நான் வெளியிடுகிறேன். எனது பிறந்தநாளில் இதை வெளியிடுவது அதை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. உங்கள் அன்பு எப்போதும் எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது என்றார். மேலும், அக்டோபர் 16, 2025 அன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். வரலாற்று படங்கள் மோகன்லாலுக்கு வரிசையாக அடி கொடுத்து வரும் நிலையில், ‘விருஷபா’ கை கொடுக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லணும்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top