Marana Mass: விஜயையே கலாய்ச்சிட்டாருப்பா பேசில் ஜோசப்… ஓடிடியில் மிஸ்ஸா? யெஸ்ஸா? இத படிங்க!

Published on: August 8, 2025
---Advertisement---

Marana Mass: நம்ம ஊரு நாயகன் விஜய் சேதுபதியாகி விட்டார் பேசில் ஜோசப். மாதம் ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றால் அவருக்கே தூக்கம் வருவது இல்லை போல. அந்த வகையில் இந்த வாரம் அவர் நடிப்பில் மரண மாஸ் திரைப்படம் ரிலீஸாகி இருக்கிறார்.

சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி இருக்கும் இப்படத்தினை பார்க்கலாமா என்பது குறித்த திரை விமர்சனம் தான் இது. கேரளாவில் மூதாட்டிகளை கடத்தி, செருப்பால் அடித்து கொன்றுவிட்டு, வாயில் பழம் வைக்கும் சீரியல் கில்லருக்கு “பனானா கில்லர்” என பெயர் வைக்கின்றனர். விசாரணையை போலீஸ் அதிகாரி அஜய் ராமச்சந்திரன் நடத்துகிறார்.

லூக் என்ற ஊருக்குத் தொல்லை தரும் இளைஞர் சந்தேகத்தில் சிக்குகிறான். ஆனால் ஊர் மக்கள் மொத்தமாக காசை சேர்த்து அவனை ஊரை விட்டு துரத்தும் பிளானில் இருக்கிறார். அவரது காதலியான ஜெஸ்ஸியும் அவனை விலகுகின்றாள். இதற்கிடையில், குருப்பு என்ற வயதானவர், அவருடைய சேட்டைகளால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுகிறார்.

அவர் தான் பனானா கில்லரின் கடைசி இலக்கு. கொலைகாரன், பழிவாங்கும் நோக்கத்துடன் பழைய காப்பீட்டாளர்களை மொத்தமாக கொன்று வருகிறான். குருப்புவை தேடி வரும் கொலைக்காரன், அவரை ஒரு பஸ்ஸில் சந்திக்கிறார். அதே பஸ்ஸில் லூக் காதலி ஜெஸ்ஸி, டிரைவரும் கண்டக்டரும் இருக்கின்றனர்.

குருப்பு ஜெஸ்ஸியை தொந்தரவு செய்தபோது அவர் ஸ்ப்ரே அடிக்க, குருப்புவுக்கு ஹார்ட் அடாக் ஆகி இறக்கிறார். கொலைக்காரன் அவனை அடக்கம் செய்வதாக கூறி உடலை எடுத்துக்கொள்கிறான். லூக் பின்னால் பஸ்ஸில் ஏறி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, உடலை ஒரு சுடுகாட்டில் புதைக்கும் திட்டம் செய்கிறான். ஆனால் அங்கு கண்டக்டர், குருப்புவின் டாலரை பார்த்து அவரே தன்னுடைய தொலைந்த தந்தை என நம்புகிறார்.

அவர்கள் உடலை ஒழுங்காக அடக்கம் செய்ய முடிவு செய்ய, கொலைக்காரன் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறான். போலீசாரிடம் இருந்து தப்பிக்க, உடலுடன் ஓடுகிறான். கடைசியில் என்ன ஆனது? கொலைக்காரன் பிடிப்பட்டானா என்பதுதான் கதை.

எப்போது போல பேசில் ஜோசப்பின் நடிப்பில் மிரட்டி விட்டு இருக்கிறார். அதிலும் மெர்சல் விஜயின் ரெவரென்ஸ் வேறு பார்க்கவே அலட்டல் இல்லாமல் வாவ் சொல்ல வைக்கிறது. படத்தில் பேசில் ஜோசப்பின் கெட்டப் நடிப்புக்கே பார்க்கலாம்.

முதல் பாதியின் பரபரப்பு இரண்டாம் பகுதியில் குறைந்து விடுகிறது. சீரியல் கில்லராக நடிக்கும் ராஜேஷ் மாதவன் நடிப்பு அமோகம். குரு சோமசுந்தரத்தின் எண்ட்ரி உண்மையிலேயே சர்ப்ரைஸ் தான். பின்னணி இசையும் பலமாக அமைய மிஸ் பண்ணாம பார்த்துட்டுங்கப்பா!

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment