Connect with us

Cinema News

விஜயகாந்துக்கு என்ன ஒரு பெருந்தன்மை…?! அப்பவே வடிவேலுவைப் பத்தி அப்படி சொன்னாராமே!

வைகைப்புயல் வடிவேலு சினிமாவுக்குள் நுழைந்த காலகட்டத்தில் சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும்போது அழுக்கு வேட்டி, சட்டையோடு இருந்துள்ளார். அப்போ அதைக் கேட்டதும் விஜயகாந்த் தான் அவருக்கு 4 வேட்டி, 4 சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு வடிவேலு தனது தனித்திறமையால் சினிமாவில் பிக்கப் ஆனார். அவர் காமெடி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி சூடு பிடித்தது.

அப்புறம் அவர் நடிக்காத படங்களே இல்லை எனலாம். அவ்ளோ பிசியான காமெடியனா மாறிட்டாரு. அவருக்குன்னு ஒரு குழுவை வைத்துக்கொண்டு காமெடி டிராக்குகளை எல்லாம் எழுதி நடித்தார். வளர வளர அவருக்கு ஆணவமும் சேர்ந்தே வளர ஆரம்பித்தது. விஜயகாந்திடமே தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். அப்போது விஜயகாந்தும் அரசியலில் இறங்கி இருந்தார்.

அவருக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்தார். ஆனால் இதற்கு விஜயகாந்த் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. அவரது சொந்த விஷயத்தில் கூட கார் நிறுத்துவது சம்பந்தமாக ஒரு சாதாரண பிரச்சனையில் தலையிட்டு வம்பிழுத்தார் வடிவேலு. அப்போதும் எதுவும் பேசவில்லை. இதெல்லாம் சேர்ந்து ரசிகர்கள் மத்தியில் அவருடைய பெயருக்குக் களங்கத்தை உண்டாக்கியது.

இதனால் அவருக்குப் படவாய்ப்புகளும் குறைந்தது. தொடர்ந்து பல வருடங்களாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார். மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க முயன்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை. விஜயகாந்தும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து மண்ணை விட்டு மறைந்து போனார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நடிகர் இளவரசு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

விருத்தாச்சலம் தொகுதிக்கு விஜயகாந்த் சார் எம்எல்ஏ ஆன பிறகு நான் அவர் கூட எங்கள் ஆசான் என்ற படத்தில் நடித்தேன். அவர்கிட்ட அரசியல் எப்படி இருக்கு அண்ணே என்று கேட்டேன். சில நேரங்களில் ‘கட்சிக்காரங்க கூட போராட முடியலப்பா… ரொம்ப முடியலன்னா வடிவேலு காமெடி பார்த்துட்டு தூங்கிடுவேன்’ என்று சொன்னார்.

அப்போதான் வடிவேலு திமுக மேடையில் விஜயகாந்த் குறித்து பேசி சர்ச்சையான நேரம். என்ன அண்ணே அப்படின்னு கேட்டதுக்கு, ‘அவன் திட்டினா திட்டிட்டு போறான்யா. ராத்திரியில நான் வடிவேலு காமெடி பார்த்துட்டு தான் தூங்குறது’ என்று சொன்னார். இது அவர் இறந்துவிட்டார் என்பதற்காக சும்மா சொல்லவில்லை. நிஜமாகவே அவர் இதை சொன்னார் என்கிறார் நடிகர் இளவரசு.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top