Vijay Tv: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களாக இருக்கும் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோடுகளின் வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
முத்துவின் கார் ஒயரை கட் செய்யும் சிட்டி அவரை வசமாக மாட்டி விட திட்டம் போடுகிறார். இதற்கு ரோகிணி வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு உதவி செய்கிறார். இதனால் அருணின் வண்டி மீது அவரின் கார் மோதி விடுகிறது.
முத்து தன்னை தான் இடிக்க வந்தான் என அருண் புகாராக மாற்ற முத்துவின் கார் கைப்பற்றப்பட்டு லைசன்ஸ் கேன்சல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வார இறுதியில் முத்துவின் கார் உண்மையாக பிரேக் பிடிக்காமல் போன விஷயத்தை கான்ஸ்டபிள் சொல்ல முத்து விடுதலையாக வாய்ப்பு உண்டாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த வார புரோமோவில் முத்து வீட்டிற்கு வந்து தன்னுடைய லைசன்ஸ் கேன்சலான விஷயம் கேன்சல் ஆகிவிட்டதாக கூறுகிறார். அதுபோல தன்னுடைய கார் பிரேக் பிடிக்காமல் போனதற்கு வயரை கட் செய்துதான் காரணம் எனவும் கூறுகிறார்.
அதற்கு வண்டி சாவி இந்த வீட்டில் இருந்து தான் போயிருக்கலாம். என முத்து பேசிக் கொண்டிருக்கும்போதே ரோகிணி மீனாவிடம் உங்க புருஷன் என்னதான் சொல்றாரு போல இருக்கு என்கிறார். உடனே மீனா அவர் இன்னும் யாரையும் சொல்லலையே என கேட்க எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு ஆணியில் மாட்டியிருந்த சாவியை நான் ஏன் எடுக்கிறேன் என்கிறார்.
உடனே முத்து நான் சாவியை அங்கே மாட்டேன் என சொல்லவே இல்லையே எனக் கூற ரோகிணி அதிர்ச்சியாக அவரை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் ரோகிணி மாட்டுவாரா இல்லை வேறு ஏதும் பிரச்சினையை சொல்லி சமாளித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரில் அரசியின் கல்யாண விஷயம் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது.
குமரவேல் அரசியுடன் இருக்கும் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவரை மிரட்டி கொண்டிருக்கிறார். இந்த வர புரோமோவில் குமரவேல் அரசியை நேரில் வந்து பார்க்கும்படி கூறுகிறார்.
சுகன்யாவும் நீ நேரில் போய் விஷயத்தினை முடித்து விட்டு வா எனக் கூற அங்கு செல்லும் அரசியை குமரவேல் கடத்தி விடுகிறார். இந்த வாரம் பரபரப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
