Connect with us

Cinema News

எனக்கு நிறைய வேலை இருக்கு!. விஜய் பற்றிய கேள்விக்கு சூரி நச் பதில்!…

நடிகர் விஜய் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்தும் அரசியலுக்கு போகிறேன் என சொல்லி அதில் நுழைந்துவிட்டார். கோட் படத்தில் நடித்துகொண்டிருந்தபோது கட்சி அறிவிப்பை அறிவித்தார். அதன்பின் விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநாட்டையும் நடத்தினார். இதில் விஜய் ரசிகர்கள் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

அதன்பின் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அறிக்கைகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை அவரின் தமிழக வெற்றிக் கழகம் குறி வைத்திருக்கிறது.

இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் குறிக்கோளாக இருக்கிறது. அதற்கான காய்களையும் அவர் நகர்த்தி வருகிறார். ஆனால், அவர் எதிர்பார்க்கும் கூட்டணி அமையுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது. சீமான் தனித்து மட்டுமே போட்டியிடுவார்.

விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதுதான் விஜயின் கடைசிப்படம் என சொல்லப்படுகிறது. அதேநேரம், இது கடைசிப்படம் இல்லை. விஜய் கதைகளை கேட்டு வருகிறார். தேர்தல் முடிவு அவர் எதிர்பார்த்தது போல் இல்லையெனில் மீண்டும் நடிக்கவருவார் எனவும் சொல்கிறார்கள்.

விஜய் அரசியலுக்கு வந்தபின் அவருக்கு நிறைய நடிகர், நடிகைகளின் ஆதரவு பெருகியிருக்கிறது. ஒருபக்கம், உதயநிதியும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு போயிருக்கிறார். அவருக்கு சந்தானம் போன்ற நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதுவும் உதயநிதி அழைத்தால் அவருக்காக பிரச்சாரம் கூட செய்வேன் எனவும் சொல்லியிருக்கிறார் சந்தானம்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் சூரியிடம் ‘தவெக தலைவர் விஜய் அழைத்தால் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொன்ன சூரி ‘விஜய் அண்ணன் சரியான வழியில் போய்க்கொண்டிருக்கிறார். எனக்கு நிறைய பட வேலைகள் இருப்பதால் பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லை’ என சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top