தினமும் 100 கிலோ கறி சாப்பாடு… வர்வங்க வயிறும் மனசும் நிறையணும்… விஜயகாந்தின் மகன் ஆச்சரிய தகவல்!

Published on: August 8, 2025
---Advertisement---

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் விரைவில் படைத்தலைவன் படம் வெளியாக உள்ளது. படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்தது. அன்பு என்ற இயக்குனர் இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் சண்முகப்பாண்டியன் பல காட்சிகளில் மெனக்கிட்டு சிறப்பாக நடித்துள்ளாராம். மே 23ல் படம் வெளியாக உள்ளது.

அப்பா சென்னை சூட்டிங்ல இருந்தாங்கன்னா எத்தனை பேருக்கு சாப்பாடுன்னு சொல்லிடுவாங்க. வீட்ல அம்மாவும், சமையல்காரரும் சேர்ந்து சமைத்து 12 மணிக்கு எல்லாம் சூட்டிங்ஸ்பாட்டுக்கு அனுப்பிடுவாங்களாம். மீன், இறால், நண்டு, வான்கோழி முட்டை, சிக்கன், மட்டன், முதலை வால்னு பலவிதமான கறி சாப்பாடுகள் அங்கு தினமும் 100 கிலோ வரை சமைத்து ரெடியாக இருக்குமாம்.

அப்பாவோட ஆபீஸ்ல நான் பெரிசா ஆனபிறகு எனக்கு நினைவு இருக்கு. பிரியாணி, கிரேவி, கறி சாப்பாடு எல்லாம் இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை கறி சாப்பாடு எல்லாருக்கும் கொடுப்போம். காலைல 10 மணி வரை டிபன் கொடுப்போம். மதியம் ஆள் வரும் வரைக்கும் கறி சாப்பாடு கொடுப்போம். அதுல எங்களுக்கு வெட்கம் எதுவும் வராது. சின்ன வயசுல இருந்தே அப்பா எங்களை அப்படி வளர்த்துட்டாங்க என்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன்.

அப்பாவோட பிறந்தநாளுக்கு நிறைய பேரு பார்க்க வருவாங்க. விருந்து மாதிரி வச்சாதான் வர்றவங்களோட வயிறும் நிறையும். மனசும் நிறையும். அதனால அப்படித்தான் எல்லா வகையான கறி சாப்பாடும் கொடுப்போம்.

இப்பவும் அப்பாவோட பிறந்தநாளுக்கு பிரியாணி, விருந்துன்னு செட்டப் பண்ணி கோவில்ல வச்சிக் கொடுப்போம். சிக்கன், மீன், காடை, மட்டன், சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி, ஃபிஷ் கிரேவி, நெய் சோறுன்னு எல்லாமே வீட்ல சமைச்சிக் கொடுப்போம். எத்தனை பேரு வந்தாலும் வீட்லதான் சமைப்போம்.

அந்தப் பழக்கம் எப்பவுமே உண்டு. ஸ்கூல்ல படிக்கும்போதே எத்தனை ப்ரண்ட்ஸ்னு கேட்பாங்க. எல்லாரும் இதெல்லாம் சாப்பிடணும்னு சொல்றாங்கன்னு சொல்வேன். அதே மாதிரி எல்லாருக்கும் சமைச்சி ரெடியா டிபன்ல கொடுத்து அனுப்புவாங்க அம்மா என்கிறார் சண்முகப்பாண்டியன்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment