சந்தானம் படத்தைப் பார்த்துட்டு வலைப்பேச்சு அந்தனன் சொன்ன விஷயம்… அதுதான் பயமாம்!

Published on: August 8, 2025
---Advertisement---

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடல் சர்ச்சையைக் கிளப்பியது. பெருமாளைத் திட்டும் விதத்தில் இருந்ததாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பாடலுக்கு வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து படத்தில் இருந்து பாடலை நீக்கிவிட்டனர்.

இன்று படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சொல்லப்போனால் இந்தப் படம் சூரியின் மாமன் படத்தை விட சூப்பராக உள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் படத்தில் வலைப்பேச்சு டீமையும் கலாய்த்துள்ளார்களாம். வீண் பேச்சு என்று படத்தில் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வலைப்பேச்சு அந்தனன் சந்தானத்தின் படம் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைப் பார்த்து விட்டு நெஞ்சைப் பிடித்து விட்டுத்தான் உட்கார்ந்துள்ளாராம் அந்தனன். இதைப்பற்றி வலைப்பேச்சுல பேசுவோம் என்றும் தெரிவித்துள்ளார். கோவிந்தனைத் திட்டுனேல்ல. பெருமாளைக் கிண்டல் பண்ணி உன் படம் வச்சேல்ல.

அதனால்தான் உன் படம் இப்படி ஆச்சு என்றும் இன்று மத்தியானத்துல இருந்தே கிளம்பிடுவாங்க. அதுதான் எனக்கு பயமா இருக்கு என்றும் அந்தனன் தெரிவித்துள்ளார். முதல் ஷோ பார்த்துட்டு வெளியில வர்றவங்க கட்டாயம் கம்பலையும், கதறலுமாகத்தான் வருவாங்க. உனக்கு நல்லா வேணும். இதை விட மோசமா எல்லாம் உன் படம் ஆகிடும்னு திட்டுவாங்க. அதுதான் எனக்குப் பயம் என்றும் அவரது வலைப்பேச்சு சேனலில் தெரிவித்துள்ளார்.

காமெடிக்குப் பஞ்சமாக உள்ள இந்தக் காலகட்டத்தில் வடிவேலு காமெடி கூட எடுபடவில்லை. சமீபத்தில் வெளியான கேங்ஸ்டர் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. சூரி காமெடியில் இருந்து விலகி ஆக்ஷன், சென்டிமென்ட் பக்கம் போய் விட்டார். யோகிபாபு வேறு பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. மிச்சம் இருப்பது சந்தானம் தான். அவரது காமெடி அதனால் தான் எடுபடுகிறது. அது தவிர கவுண்டர் கொடுப்பதில் அவர் கில்லாடி. அதனால் தான் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு வரவேற்பு இருக்கிறது. அதே நேரம் படத்தில் வலைப்பேச்சு டீமைக் கலாய்த்துள்ளதால் அந்தனன் படத்திற்கு இப்படி விமர்சனம் சொல்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment