ஒருநாள் முழுக்க அழுது கொண்டே இருந்தார் அப்பா!. சண்முக பாண்டியன் பகிர்ந்த சம்பவம்!..

Published on: August 8, 2025
---Advertisement---

வடிவேலு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த போது சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால், கவுண்டமணி அவரை விரட்டிவிட விஜயகாந்திடம் போய் அழுதார். உடனே ஆர்.வி.உதயகுமாரை அழைத்து ‘எனக்கு குடை பிடிப்பது போல ஒரு வேஷத்தை இவருக்கு கொடுங்கள்’ என சொல்ல வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு, மாற்ற வேறு உடை கூட இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு வேட்டி, சட்டைகளைகளை வாங்கி கொடுக்க சொன்னார் விஜயகாந்த்.

அதன்பின் பல படங்களிலும் நடித்தார் வடிவேலு. விஜயகாந்துடனும் தவசி உள்ளிட்ட பல படங்களிலும் காமெடி செய்தார். விஜயகாந்த் குடியிருந்த தெருவிலேயே வீடு வாங்கினார் விஜயகாந்த். ஒருநாள் கார் பார்க்கிங் தொடர்பாக தேமுதிக தொண்டர்களுடன் வடிவேலு சண்டை போட அது பெரிய பிரச்சனையாக மாறியது.

அந்த கோபத்தில் விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முழுவதிலும் விஜயகாந்தை மிகவும் அவதுறாகவும், தரக்குறைவாகவும் பேசினார் வடிவேலு. இது விஜயகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. ஆனால், விஜயகாந்த் அதற்கு ரியாக்ட் செய்யவே இல்லை. வடிவேலு மீது மாறாத கறையாக இது மாறிவிட்டது.

விஜயகாந்த் இறந்தபோதும் வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை. இதுவும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்நிலையில், படைத்தலைவன் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கலந்துகொண்டார். அப்போது அவரிம் வடிவேலு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்னதாவது:

வடிவேலுவை சொந்த மாமா போலவே பார்த்தோம். அவரோ விட்டுவிட்டு போய்விட்டார். ஆரம்பத்தில் வடிவேலுவுக்கு அப்பா சில உதவிகளை செய்தார். அதன்பின் வடிவேலு தனது சொந்த திறமையில் முன்னேறி ஸ்டார் காமெடி நடிகராக மாறினார். அவர் அப்பாவை அப்படி பேசியதில் எங்களுக்கு வருத்தம் இருந்தது. அப்பாவும் வருத்தப்பட்டார். ஆனால், ‘ஒரு கட்டத்தில் அவன் சூழ்நிலை என்னவோ அப்படி பேசுகிறான்.. அவனை பற்றி நீங்கள் பேசவேண்டாம்’ என சொல்லிவிட்டார்.

என் படத்தில் கூட அவரை நடிக்க வைக்கலாம் என பேசினோம். ஆனால், அது நடக்கவில்லை. அப்பா சோகமாக இருக்கும்போது வடிவேலு காமெடியை பார்த்துதான் சிரித்து கொண்டிருப்பார். நாங்கள் நம்பியவரே துரோகம் செய்ததால் ‘இனிமேல் எவன் செய்தால் என்ன?’ என்கிற மனநிலை எங்களுக்கு வந்துவிட்டது’ என பதில் சொன்னார் விஜயபிரபாகரன்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment