Cinema News
முருகதாஸின் திருமணத்திற்கு விஜயகாந்த் தரப்பில் இப்படி ஒரு கண்டிஷனா?
சமீபத்தில்தான் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அவரது மகன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த விழாவிற்கு விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே சண்முகப்பாண்டியன் நடித்து வெளியான படங்கள் அந்தளவு எதிர்பார்ப்பை பெறவில்லை. ஆனால் இது ஒருவித ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் சரத்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த் குறித்து பலரும் பல தகவல்களை பகிர்ந்தனர்.
அப்போது விஜயகாந்தின் மைத்துனரும் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான சுதீஷ் முருகதாஸை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். அதில் வல்லரசு படம் வெளியாகி 25 வருடம் முடிவடைந்திருக்கிறது என்று சுதீஷ் கூறியிருந்தார். 2001 ஆம் ஆண்டு எங்க வீட்டுக்கு கதை சொல்ல வர்றாரு முருகதாஸ். நானும் கேப்டனும் கதை கேட்கிறோம். கதை கேட்டு முடித்ததும் முருகதாஸ் என்னிடம் இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம்,
இந்தப் படம் முடிந்ததும் கேப்டனை என் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரணும் என்று சொன்னார். முதல்ல படத்தை முடி. படம் ஹிட்டாகட்டும். ஹிட்டானால் கேப்டனை நான் கூட்டிட்டு வர்றேன் என்று சொன்னேன். படம் எல்லாம் முடிஞ்சதும் நானும் என் சகோதரியும் பிரிவ்யூ தியேட்டரில் படம் பார்க்கிறோம். முருகதாஸும் இருந்தார். இடைவேளைக்கு பிறகு முருகதாஸ் எழுந்து போய்விட்டார்.

ஏனெனில் க்ளைமாக்ஸ் என்ன என்பது உங்களுக்கு தெரியும். முருகதாஸுக்கு பயம் நானும் என் அக்காவும் க்ளைமாக்ஸை பார்த்து எதாவது சொல்லிடுவோம்னு பயம். ஆனா கேப்டனுக்கு க்ளைமாக்ஸ் தெரியும். ஆனால் க்ளைமாக்ஸ் பற்றி எனக்கு ஒன்னுமில்லப்பா. சுதீஷ்கிட்டயும் பிரேமலதா கிட்டயும் கேட்டுக்கோ என கேப்டன் சொன்னாராம். நாங்க படம் முடிஞ்சு முருகதாஸை தேடுறோம்.
அப்படியே லிஃப்ட்ல இறங்கி வர்றாரு. நான் கட்டிப்பிடிச்சு படம் சூப்பர். இதான் க்ளைமாக்ஸ் என நானும் சொன்னேன் என் அக்காவும் சொன்னாங்க. அதான் ரமணா. அதே மாதிரி எல்லாரும் சொல்றீங்க கேப்டன் B and C ஹீரோனு. ஆனால் ரமணா படத்திற்கு பிறகு கேப்டன் A செண்டர் ஹீரோவாகவும் மாறினார். அதன் பிறகு படம் ஹிட்டாச்சு. முருகதாஸ் என்னிடம் வந்து எப்படியாவது கேப்டனை கல்யாணத்துக்கு கூட்டிக்கிட்டு வாங்க என்று சொன்னார்.
கேப்டனும் கல்யாணத்துக்கு போகணுமா? என்று கேட்டார். இல்ல வாக்குக் கொடுத்தாச்சு. அதனால் போயிட்டு வருவோம் என கல்யாணத்துக்கு போனோம். கள்ளக்குறிச்சியில் திருமணம் நடைபெற்றது. அது திருமணமா? பெரிய மாநாடு. அங்கு கேப்டன் பேசினார். அரசியல் பேசினார். அங்குதான் ஆரம்பித்தது தேசிய முற்போக்கு திராவிட கழகம் என சுதீஷ் கூறினார்.