Connect with us

Cinema News

கவுண்டமணி மனைவி இறப்புக்கு பிரபலங்கள் ஆப்சென்ட்…! அந்த சாபக்கேடுதான் காரணமா?

கவுண்டமணியின் மனைவி சாந்தி சமீபத்தில் காலமானார். 83 வயதான கவுண்டமணிக்கு இது பேரிடியாக இருந்தது. ஆனால் இந்த துக்க நிகழ்வில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைத் தந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

கவுண்டமணியை எல்லாருக்கும் சினிமா நடிகர், காமெடி நடிகராகத் தான் தெரியும். ஆனா அவரு சினிமாவைப் பற்றி நல்ல நாலெட்ஜ் உள்ளவர். உலக சினிமாக்களை அந்தக் காலத்திலேயே நிறைய பார்த்தவர். அப்போ டைரக்டர் ஏதாவது ஒரு படத்துல இருந்து சின்ன சீன் வச்சாருன்னா கூட அதைக் கவுண்டமணி கரெக்டா கண்டுபிடிச்சிடுவாரு. என்ன டைரக்டர் சார் அந்தப் படத்துல இருந்து எடுத்துருக்கீங்க?

படத்தோட பேரைச் சொல்லி வருஷத்தையும் சொல்லி கமெண்ட் அடிப்பாராம். நாடக உலகில் இருந்து வந்தவர். அப்போது பல சிக்கல், இன்னல்கள், அவமானங்களை எல்லாம் தாண்டி வந்தவர். அப்போ கவுண்டமணியின் மனைவி சாந்தியும் ஒரு டிராமா ஆர்டிஸ்டாகவே இருந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிகிறது. 79ல தான் கல்யாணம்.

அதன்பிறகு தான் பதினாறு வயதினிலே மாதிரி அவருக்கு பல நல்ல படங்கள் அமைகிறது. கவுண்டமணியை வெளியில் பார்ப்பதற்கு கரடு முரடா இருப்பார். ஆனால் பலாப்பழம் மாதிரி. மனைவியை ரொம்ப நேசித்தார். அவரிடம் வீட்டு நிர்வாகம் உள்பட எல்லா பொறுப்பையும் கொடுத்து விட்டார் கவுண்டமணி. அவர் ஒரு கார் பைத்தியம். ஏழெட்டு கார் வைத்திருந்தார்.

ஆனால் அவரது மனைவி எளிமையானவர். கவுண்டமணி இறந்த பிறகுதான் மனைவியின் போட்டோவே வெளியில் வந்தது. காரணம் என்னன்னா அவரு வீடு வேற, தொழில் வேறன்னு பிரிச்சி வச்சிருந்தாரு. 2 மகள்களையும் சினிமா வெளிச்சமே படாம அவர்களை வளர்த்து பேரன், பேத்திகளை எல்லாம் பார்த்துட்டாங்க. பொண்டாட்டி பேச்சைக் கேட்டு சினிமாவில் வாழ்ந்து வருபவர்கள்ல ரஜினி, ஆர்.கே.செல்வமணி வரிசையில் கவுண்டமணியையும் சேர்த்துக் கொள்ளலாம். கவுண்டமணி மனைவியை ரொம்ப நேசித்தார்.

அவரது இறப்பு ரொம்பவே பாதித்தது. அவரு இறப்புக்கு சினிமாவுல பலரும் வரல. யாருமே வரமாட்டாங்க. இது சினிமாவின் சாபம். பிரபலமா இருந்தால் தான் தேடி ஆள்கள் வருவாங்க. புகழ் வெளிச்சத்தில் இருந்துவிட்டு மங்கிப் போனால் இன்றைய காலகட்டத்தைத் தான் பார்ப்பார்கள். அந்தவகையில் இந்த சினிமா உலகம் நன்றி கெட்ட உலகம். கவுண்டமணி எல்லா நடிகர்களுடனும் நடிச்சிருக்காரு. விஜய், அஜித் வரை சொல்லலாம். ஆனா செந்தில், விஜய், அர்ஜூன், சிவக்குமார் வந்தாரு.

பி.வாசு, சுந்தர்.சி., வி.சேகர் என இயக்குனர்கள் வந்தாங்க. கவுண்டமணி ஒரு காலத்தில் எல்லாருக்கும் தேவைப்பட்டார். அவர் மனைவி இறந்ததும் அவர் ஒரு ஓரமா ஒதுக்கப்பட்டார். அவர் மனைவி இறந்ததுக்கு யாருமே போகலன்னா அதுக்கு என்ன அர்த்தம்? என்று கேட்கிறார் பாலாஜி பிரபு.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top