Connect with us
veera dheera sooran

Cinema News

இந்த ரெண்டு படங்களோட கலவைதான் வீர தீர சூரன்!. பொசுக்குன்னு சொல்லிட்டாரே விக்ரம்!…

Veera Dheera Sooran: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் ஓடாமல் போய் நல்ல வாய்ப்புக்களுக்காக காத்திருந்து சேது படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். இந்த படம்தான் இவருக்கு சியான் என்கிற அடைமொழியை கொடுத்தது.

அதன்பின் தில், தூள், சாமி போன்ற பக்கா கமர்ஷியல் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டதோடு கோலிவுட்டின் முக்கிய நடிகராகவும் மாறினார். கமலை போல பல புதிய பரிசோதனை முயற்சிகளை செய்வது, வித்தியாசமான கெட்டப்புகளை செய்வது என ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

veera dheera sooran

#image_title

இப்போது இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் வீர தீர சூரன். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது. புதிய முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த படத்தில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் என பலரும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

வீர திர சூரன் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லரும் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். ஏற்கனவே விஜய் டிவி டிடி இவர்களை பேட்டியெடுத்தபோது பல தகவல்களையும் படக்குழு பல தகவல்களையும் சொன்னார்கள்.

vikram

#image_title

அதோடு, படப்பிடிப்பில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தனர். குறிப்பாக இந்த இந்த படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் சுராஜ் பேசியது வைரல் வீடியோவாக சமூகவலைத்தளங்களை சுற்றி வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விக்ரம் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

அருண் ஏற்கனவே இயக்கிய சேதுபதி மற்றும் சித்தா ஆகிய இரண்டு படங்களின் கலைவையாக வீர தீர சூரன் இருக்கும் என தெரிவித்தார். அதேபோல், இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் எனவும் அவர் நம்பிக்கையாக பேசினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top