Connect with us

Cinema News

சட்டப்படி நடவடிக்கை எடுங்க… இல்ல குடும்பத்தோடு தீக்குளிப்பேன்… ஜிபி முத்துவுக்கு என்ன ஆச்சு?

சிட்டிசன் படத்தில் அத்திபட்டியைக் காணோம்னு அஜித் கம்ப்ளைண்ட் கொடுப்பார். அதுதான் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. அது மாதிரி இப்போது நக்கலும், நய்யாண்டியுமாகப் பேசி யூடியூப்பில் கலக்கி வரும் ஜிபி முத்து ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துள்ளார். அதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. என்னன்னு பார்க்கலாமா…

ஜிபி முத்து நெல்லைத் தமிழில் பேசி யூடியூப்பில் பிரபலமானவர். இவருக்கு வரும் கடிதத்தைப் பிரித்துப் படிக்கும்போது இவர் கமெண்ட் அடிப்பது கலகலன்னு சிரிப்பை வரவழைக்கும். இவருக்கு என்ற தனி ரசிகர் பட்டாளமே வர ஆரம்பித்தது இவருடைய வெகுளித்தனமான பேச்சால் தான். யூடியூப், இன்ஸ்டான்னு இவர் எப்போ வீடியோ போட்டாலும் அதற்கு பெரிய வரவேற்பு உண்டு. இவருடைய பேச்சாற்றல் இவரை சினிமா வரை அழைத்து வந்துள்ளது.

இப்போது இவருக்கு ஒரு பிரச்சனை. அதுக்காக இணையத்தில் ஒரு பேட்டி கொடுக்க வைரலாகி வருகிறது. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் உள்ள பெருமாள்புரம். இவர் கலெக்டர் ஆபீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். சில நபர்களின் ஆக்கிரமிப்பால் இவரது ஊரில் கீழ்த்தெரு காணாமல் போய்விட்டதாம். ஆனால் இவரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளது.

அரசு புறம்போக்கு இடமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தார்களாம். ஆனால் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இவர் பேசும்போது கோவில் சொத்தை விற்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் எங்க கோயில் சொத்தை விற்றுள்ளார்கள். என் சொந்த பாதையையும் அடைத்துளளார்.

இது ஒரு தனி நபர் அவரது சொந்த பகை காரணமாகவே இப்படி செய்துள்ளார். அவரால் தொடர்ந்து என் குடும்பத்திற்கே பிரச்சனை. தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். எல்லாரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்றாங்க. ஆனா எடுக்கவே இல்லை. அதிகாரிகள் தான் அந்த கீழ்த்தெருவைக் கண்டுபிடிச்சித் தரணும். 6 வருஷமாக இதுக்காகப் போராடி வருகிறேன். தண்ணீ அடிச்சிட்டு பிரச்சனை பண்ணினார்கள்.

நான் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன். 20 அடி பொதுப்பாதையே காணாமல் போய்விட்டது. என் வளர்ச்சி பிடிக்காமல் தான் இப்படி செய்றாங்க. என் சோலியை முடிக்கணும்கறதுதான் அவங்க குறிக்கோள். இனியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலன்னா குடும்பத்தோடு தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top