Connect with us
Vijay

Cinema News

இன்னும் 25 நாட்களில் முழுநேர அரசியல்!. பக்காவா பிளான் போட்ட விஜய்!….

நடிகராக இருந்த விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார். எம்.ஜி.ஆர் துவங்கி சிவாஜி, பாக்கியராஜ், ராமராஜன், விஜயகாந்த், நெப்போலியன், கார்த்திக் என பலரும் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால், விஜயகாந்த் மட்டுமே எதிர்கட்சி தலைவர் என்கிற நிலை வரை போனார். அவரின் உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால் தமிழக முதல்வராகவும் அமர்ந்திருப்பார். ஆனால், நடக்கவில்லை.

அவருக்கு பின் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தார். மதுரை சென்று மாநாடெல்லாம் நடத்தினார். ஆனால், கோவையில் வானதி ஸ்ரீனிவாசனோடு போட்டி போட்டு தோற்றுப்போனார். அரசியலுக்கு வந்த சில வருடங்கள் கழித்தே ரசிகர்கள் வேறு.. வாக்களர்கள் வேறு என்பதை புரிந்துகொண்டேன் என சொல்லியிருக்கிறார். ரஜினியோ அரசியலுக்கு வருவது போல பாவ்லா காட்டிவிட்டு பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி எஸ்கேப் ஆனார்.

tvk vijay

tvk vijay

தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் ஆக்ரோஷமாக பேசி விட்டு ஜனரஞ்சகன் ஷூட்டிங்கில் நடிக்க போய்விட்டார். அவ்வப்போது அவரின் அறிக்கைகள் மட்டும் வெளியாகி வருகிறது. புஸ்ஸி ஆனந்தை கேட்டால் எல்லாம் தலைவர் சொல்லுவார் என சொல்லி நழுவி விடுகிறார்.

ஒருபக்கம் விஜய் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். பனையூர் அரசியல்வாதியாக மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார்.. மக்கள் பிரச்சனைகளுக்காக அவர் போராடவில்லை என திமுக சொல்லி வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையே ‘விஜய் Work From Home’ முறையில் அரசியல் செய்து வருகிறார். அவர் களத்திற்கு வருவதில்லை. திரைப்படங்களில் நடிகைகளின் இடுப்பை கிள்ளிவிட்டு இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார்’ என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

thalapathy69

thalapathy69

விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார். இதுதான் தனது கடைசிப் படம் என விஜய் முடிவு செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜயின் இலக்காக இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட்டு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் அவரே திட்டமாக இருக்கிறது.

இன்னும் 25 நாட்களில் விஜய் தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டிருக்கிறாராம். ஜனரஞ்சகன் படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி, மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு என தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் இறங்கவுள்ளாராம். மேலும், தமிழகத்தின் பல ஊர்களிலும் பொது கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இன்னும் இன்னும் 25 நாட்களில் விஜயை முழு நேர அரசியல்வாதியாக மக்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top