ஔவையார் அழகா சொன்னத அசிங்கமா சொன்ன கமல்.. வார்த்தை வித்தகராச்சே

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் கமலுக்கு தெரியாததே இல்லை. சினிமாவில் உள்ள எல்லா துறைகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர். எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை உடனே கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் கொண்டவர். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை புதியதாக கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் எப்பொழுதுமே இருந்து கொண்டு தான் வருகின்றது .

அந்த வகையில் இன்றைய பெரும்பாலான படங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பமோ அல்லது காட்சிகளோ அடடே இதை கமல் அப்பவே பண்ணி விட்டாரே என்ற சொல்லும் அளவிற்கு தன்னுடைய கால் தடத்தை விட்டுச் சென்றிருப்பார் கமல். இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் கமல். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைஃப் திரைப்படத்தில் நடித்து வரும் கமல் அந்த படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் அவருக்குத் தெரிந்த ஏராளமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலும் மணிரத்தினமும் இணையும் படமாக தக் லைப் திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் சிம்பு த்ரிஷா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் பொழுது அவரிடம் ஏஐ தொழில்நுட்பத்தை பற்றிய கேள்வியை கேட்க அதற்கு அவர் வித்தியாசமான பதிலை கொடுத்துள்ளார்.

அதாவது ஏஐ கோர்ஸ் படிக்க சென்று இருக்கிறார்கள் என சொன்னார்களே அதை முடித்து விட்டீர்களா என்ற ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார்கள். அதற்கு கமல் ஏஐ மட்டுமல்ல இன்னும் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும். சொல்லப் போனால் எனக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. தெரிந்த விஷயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

kamal

kamal

இதையேதான் அவ்வையார் அழகாக சொன்னார். நான் கொஞ்சம் அசிங்கமாக சொல்கிறேன் அவ்வளவுதான் என கூறினார் கமல். அவர் சொன்ன அந்த அவ்வையாரின் கூற்று என்பது கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என சொல்லி இருப்பார். இது தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர். மிகவும் பிரபலமான ஒரு சொற்றொடர். இதைத்தான் கமல் இப்படி சொல்லி இருக்கிறார். இந்த பணிவு அடக்கம் மட்டுமே தான் அவரை பெரிய உச்சாணிக்கொம்பில் அமர வைத்திருக்கிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment