Connect with us

Cinema News

அரசியல் முதல் திரைப்பிரபலங்கள் வரை.. களைகட்டிய ஐசரி கணேஷ் இல்லத்திருமண விழா

இன்று சென்னையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது. சென்னை ஈசிஆர் ரோட்டில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் இவர்களுடைய திருமணம் இன்று நடைபெற்றது.

velumani

velumani

திருமணத்திற்கு அரசியல் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவருமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ரஜினி கமல் சத்யராஜ் குஷ்பூ ராதிகா என எண்பதுகளில் தொடங்கி இப்போது வரை இருக்கும் நடிகர்கள் வரை அனைவருமே இவருடைய இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருக்கின்றனர்.

nizhalgal ravi

nizhalgal ravi

அரசியலில் பிரேமலதா விஜயகாந்த், துர்கா ஸ்டாலின் ,ஜெயக்குமார் ,வைகோ ,வேலுமணி, சீமான் என அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். ஐசரி கணேஷ் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் விமர்சையாக நடத்தி இருக்கிறார்.

mariselvaraj

mariselvaraj

இது முடிந்து திருமண வரவேற்பு அதே ஈசிஆர் ரோட்டில் அமைந்துள்ள பாஷ்யம் பிரார்த்தனாவில் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மாலத்தீவில் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் மட்டும் சென்று மேலும் இந்த திருமண வைபவத்தை சிறப்பாக்க இருக்கின்றார்கள்.

கிட்டத்தட்ட 250 பேர் ஒரு சார்ட்டட் பிளைட்டில் மாலத்தீவுக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது .தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இன்று ஒரு சிறந்த கல்வியாளராக திகழ்கிறார் ஐசரி கணேஷ்.

jeeva

jeeva

இவருடைய அப்பா ஐசரி வேலன் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர் .பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கொடி நாட்டியவர். இப்போது தந்தை வழியில் மகன் என்பதைப் போல ஐசரி கணேஷும் பல வெற்றி திரைப்படங்களை இந்த சினிமாவிற்கு கொடுத்து வருகிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top