latest news
சிங்கப்பெண்ணே: மித்ராவின் கண்ணில் மண்ணைத் தூவி ரூட்டை மாற்றிய ஆனந்தி… இனி நடப்பது என்ன?
சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனந்திக்கு எத்தனையோ தடைகள் தொடர் முழுக்க வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் அவள் எப்படி சமாளிக்கிறாள் என்பதுதான் கதை. ஒவ்வொரு எபிசோடிலும் ஆனந்தியைச் சுற்றியே கதை நகர்கிறது. அடுத்தடுத்த திருப்பங்களும் தொடரை விடாமல் பார்க்கும் ஆவலைத் தூண்டி வருகின்றன.
தன் கர்ப்பத்துக்குக் காரணமானவன் இந்தக் கம்பெனியில்தான் இருக்கணும். எப்படியும் கண்டுபிடிக்கறேன் என்ற வைராக்கியத்துடன் ஆனந்தி தேடி அலைகிறாள். அதற்கான ஒரு வீடியோ மகேஷிடம் இருப்பதை அறிந்து எப்படியாவது வாங்கி விட நினைக்கிறாள். அதற்கு மித்ரா இடையூறாக இருக்கிறாள். இனி இன்றைய எபிசோடில் நடந்தது என்னன்னு பார்ப்போம்.
ஆனந்தி மகேஷை சந்தித்து விடக்கூடாது என்று கண்கொத்திப் பாம்பாக மித்ரா அவளை ஃபாலோ பண்ணுகிறாள். கருணாகரன் அறைக்கு வந்து அங்கேயே இருந்து ஆனந்தியைக் கண்காணிக்கிறாள். இதனால் ஆனந்தி செய்வதறியாது தவிக்கிறாள். இதற்கிடையில் அன்புவின் அம்மா ஆனந்தியைப் பார்க்க கம்பெனிக்கு வருகிறார். ஆனந்தியும் வேறு வழியில்லாமல் போய் பார்க்கிறாள். இது மித்ராவுக்குத் தெரிய வர ஆனந்தியைப் பார்க்க அனுமதிக்கிறாள்.
அதே நேரம் அவளையும் ஃபாலோ பண்ணுகிறாள். அன்புவின் அம்மா ஏதோ ஒரு கோவிலுக்கு பூஜை வைக்கணும். உனக்கும், எனக்கும் உடல்நிலை சரியில்லாதபோதே வேண்டி இருந்தேன். நாளைக்கு நீயும் வரணும். உன்னை அழைக்கத்தான் நான் நேரில் வந்தேன்னு சொல்லிடுறாங்க. அந்த நேரம் அன்பு வந்து ஆனந்தி எங்கே கூப்பிட்டாலும் வர மாட்டான்னு கோபத்தில் சொல்கிறான்.
ஆனால் ஆனந்தியிடம் அன்புவின் அம்மா நான் கூப்பிட்டால் என் மருமகள் வருவாள் என்று சொல்கிறார். அதற்கேற்ப ஆனந்தியும் வர சம்மதிக்கிறாள். அந்த நேரம் பார்த்து அன்புவும் சந்தோஷப்படுகிறான். அடுத்து மதிய உணவு இடைவேளை வருகிறது. எல்லாரும் சாப்பிடக் கிளம்புறாங்க. மித்ரா ஆனந்தியை வைத்த கண் வாங்காம பார்க்கிறாள்.
ஆனந்தியும் அதைப் பார்க்க, சௌந்தர்யாவிடம் விஷயத்தைச் சொல்கிறாள். நம்மளை மகேஷை சந்திக்க விடாதபடி மித்ரா இருக்கிறாள். அதனால் நீ போய்ட்டு வீடியோவைக் கேளுன்னு சொல்லி அனுப்புகிறாள். சௌந்தர்யாவும் சரின்னு சொல்லி கிளம்புகிறாள். ஆனந்தி சாப்பாட்டை எடுத்தபடி மித்ராவைப் பார்க்கிறாள். இனி நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.