இப்படி ஒரு பேரா? எப்படிமா வாய்ல நுழையும்? நடிகையிடம் பேரை மாற்ற சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் 90 கள் காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ஒரு பெரிய தாக்கத்தை அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தியவர் கே எஸ் ரவிக்குமார். இப்போது நெல்சன், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் என இளம் தலைமுறை இயக்குனர்களை எந்த அளவு கொண்டாடுகிறோமோ அவர்களுக்கு இணையான பல மடங்கு புகழை அடைந்தவர் தான் கே எஸ் ரவிக்குமார்.

ஆனால் இவருடைய படங்கள் பெரும்பாலும் குடும்ப படங்களாகவே அமைந்திருக்கின்றன .இன்று பெரிய பெரிய ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், கமல் என அனைத்து நடிகர்களையும் வைத்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் .இன்று ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த கே எஸ் ரவிக்குமார் அந்த படத்தில் நடித்த நடிகையின் பெயரை பற்றி கிண்டலாக விமர்சித்தது தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு மர்ம திரில்லரான படம் தான் அகவன். இந்த படத்தை இயக்கியவர் ஏழுமலை. அவருடைய இரண்டாவது படமாக இப்போது ரிலீசாக கூடிய திரைப்படம் மையல். இதற்கு முதல் பார்வையிலேயே காதல் என்பது பொருள். 2006 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய பொய் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இந்த ஏழுமலை.

அது மட்டுமல்ல பிரபு சாலமனுடன் மைனா, கும்கி மற்றும் காடன் ஆகிய படங்களிலும் இவர் பணியாற்றி இருக்கிறார் .ஜெயமோகன் எழுதிய இந்த மையல் திரைப்படம் கல்வராயன் மலை மற்றும் மேலமஞ்சனூர் போன்ற மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் சமூகத்தின் பார்வையில் அனைவரும் சமமாக கருதப்படுகிறார்கள் என்று நமக்கு உணர்த்தும் படமாக இருக்கும்.

இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவரின் பெயர் சம்ரிதி தாரா. இவருடைய பெயரை பற்றி கே எஸ் ரவிக்குமார் கூறும் பொழுது சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் அது என்ன இரண்டும் கலந்த கலவையாக சம்ரிதி தாரா? இதை எப்படிமா நாங்க கூப்பிடுவோம்? அவருடைய உண்மையான பெயர் அஞ்சு கிருஷ்ணன் தான். மலையாளத்தில் அந்தப் பேரில் தான் நடித்து வருகிறார்.

samrithi thara

samrithi thara

அப்படியே இருந்திருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. இந்த படம் சக்ஸஸ் ஆச்சுனா இப்படியே பேரை வச்சுக்கோங்க. ஆனால் அழகையும் தாண்டி அம்சமா இருக்காங்க என கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment