சூரி பெரிய அழகனா? படங்கள் ஹிட் அடிக்குதே… என்ன காரணம்? இயக்குனர் சொன்ன அந்த தகவல்

Published on: August 8, 2025
---Advertisement---

காமெடி நடிகரா வந்து தப்பு தப்பா இங்கிலீஷ் பேசி நகைச்சுவை பண்ணினார் நடிகர் சூரி. ஆரம்பத்துல கருப்பா, ஒல்லியா இருந்த இவரு வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா தின்று காமெடி பண்ணினார்.

அந்த பரோட்டா திங்குற போட்டியில தப்பா எண்ணிட்டீங்கன்னு சொன்னதும் அப்படின்னா எல்லாத்தையும் அழி. முதல்ல இருந்து மறுபடியும் சாப்பிடுறேன்னு சொல்வார் சூரி. அந்தக் காமெடி இப்போது பார்த்தாலும் சிரிப்புதான். அதுதான் அவரது அக்மார்க் காமெடி ஆனது. அந்தப் படத்துல இருந்து ‘பரோட்டா சூரி’ன்னே சொல்ல ஆரம்பிச்சாங்க.

சிவகார்த்திகேயனுடன் இவர் சேர்ந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவருக்கு இன்னொரு வெற்றிப்படிக்கட்டாக அமைந்தது. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்த இவர் திடீர் என வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதைநாயகனாக நடித்து அசத்தி விட்டார். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்.

எப்படி காமெடியன் ஹீரோவானார்னு. சந்தானம் அழகா இருக்காரு. ஹீரோ ஆகிட்டாரு. ஆனாலும் காமெடி ஹீரோ தான். ஆனா இவரு அப்படியா? என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து கொட்டுக்காளி, விடுதலை2, கருடன், மாமன் என ஹிட்டுகளாகக் கொடுக்கத் தொடங்கினார் சூரி. எல்லாத்துக்கும் என்ன காரணம்னு பார்க்கலாமா? இதுகுறித்து பிரபல இயக்குனர் ராஜன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

சூரி என்ன பெரிய அழகனா? காமெடி நடிகர் சூரி பரோட்டாவாக தின்னுட்டு காமெடி பண்ணிட்டு இருந்தான். ஆனால் இப்போ தொடர்ந்து நாலைந்து படங்கள் ஹீரோவா வெற்றி கொடுத்துருக்கான்.

ஏனென்றால் அந்தப் படத்தில் கதை இருந்தது. குடும்பம் இருந்தது. கவர்ச்சியும், கொச்சையும் அந்தப் படங்களில் கிடையாது. அதே மாதிரி குரூப் டான்ஸ் இல்லை. பெரிய சண்டைக்காட்சிகளும் இல்லை. அதனால்தான் அவனுக்கு வெற்றி என்கிறார் இயக்குனர் ராஜன்.

ஒரு பக்கம் லக் இருந்தாலும் இன்னொரு பக்கம் சூரியின் கடுமையான உழைப்பும், கதைத் தேர்வும், நடிப்புத் திறமையும்தான் அவரது வளர்ச்சிக்குக் காரணம் என்றே சொல்ல வேண்டும்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment