Cinema News
ஆளாளுக்கு ஒரு பக்கம்!.. ரவி மோகன் மகன் பிறந்தநாளை பிச்சு பிச்சு கொண்டாடியிருக்காங்களே!..
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் தனது மகனின் பிறந்த நாளை அம்மா, அப்பா, பாட்டி என ஆளாளுக்கு தனித்தனியாக கொண்டாடியுள்ளனர்.
ரவி மோகன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான பிரதர் திரைப்படம் மற்றும் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் உள்ளிட்டவை பெரிதாக எந்த வரவேற்பையும் பெறாத நிலையில் தற்போது அவர் தனது 34வது படமாக டாடா படத்தை இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கணேஷ் கே. பாபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து ஜீனி, மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

மேலும், ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் இணைந்து ப்ரோ கோட் படத்தில் நடிக்கவுள்ளார். பின்னர் ரவி மோகன் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும், அவரது படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவி தனது 15 ஆண்டு திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து செல்ல விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து சமூக ஊடகங்களில் ஆர்த்தி மற்றும் ரவி மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர். பின்னர், இருவருக்கும் நீதிமன்றம் சமூக ஊடகத்தில் அறிக்கை விடுவதை தடை விதித்தது. மேலும், பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி தொடர்பு வைத்திருப்பதாக வதந்திகள் பரவின, அதை இருவரும் மறுத்த நிலையில் தற்போது இருவரும் ஆல்பம் பாடல் ப்ர்மோஷனில் இணைந்து நடித்துள்ளனர்.

டிக் டிக் டிக் படத்தின் மூலம் அப்பாவுடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமான ரவியின் மூத்த மகன் ஆரவ் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தனித்தனியே அம்மா, அப்பா, பாட்டி என அனைவரும் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.