Connect with us

latest news

கமல் வளர்ச்சியில முக்கியமான பங்கு அவருதானாம்… பிரபலம் சொன்ன மறுக்க முடியாத உண்மை!

கமல் 5 வயதுல களத்தூர் கண்ணம்மாவில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இன்று வரை படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேராகத் தெரிந்துள்ளார் கமல். இவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்கது. நடிகர், டான்ஸ் மாஸ்டர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், மேக்கப் மேன் என பல கலைகளைத் தெரிந்து கொண்ட சகலகலா வல்லவன் தான் கமல்.

இவருடைய தயாரிப்பில் பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்துள்ளன. கடைசியாக வெளியான விக்ரம், அமரன் படங்கள் வசூலை வாரி இறைத்தன. இவரது குருநாதர் கே.பாலசந்தர். இருந்தாலும் கமலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஒரு இசை அமைப்பாளர். அவர் தான் இசைஞானி இளையராஜா. இதுகுறித்து பிரபல இயக்குனர் ஹரிஹரன், பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

1975ல இருந்து 1995 வரை இளையராஜாவின் ராஜாங்கம் தான். இளையராஜா இல்லாத தமிழ்சினிமா வேண்டாம்னுதான் பலரும் சொன்னாங்க. ஆல் இண்டியா ரேடியோவிலேயே ஆல் இளையராஜா சாங்ஸ் தான் போட்டாங்க. பல திரைப்படங்களுக்கு முகமாக இருந்தார். தயாரிப்பாளர்கள் எல்லாரும் ‘ராஜா சார் இருக்காருல்ல. அவரு போதும். நீ என்ன வேணாலும் கதை எழுது. அவரு பாட்டை வச்சி படத்தை ஓட்டிடலாம்’னு நம்பிக்கையில இருந்தாங்களாம்.

இந்த மாதிரி மியூசிக் டைரக்டர் இந்தியாவில் எந்த மொழியிலும் கிடையாது. கமல், இளையராஜாவுடன் நல்ல நட்பு கொண்டு இருந்தார். அவர் கூடவே இருந்து பாட்டெல்லாம் பாடிக்கிட்டு தேவையான பாட்டை வாங்கிக்கிட்டு இருந்தாரு.

அவங்க இருவரும் இணைந்த பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். குறிப்பா இளையராஜாவின் பாடல்களை வைத்து கமல் வளர்ந்து கொண்டு இருந்தார். கமல் வளர்ச்சியில் இளையராஜாவின் பங்கு முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது கூட இளையராஜா தான் எங்கு கச்சேரி நடத்தினாலும் அதில் தவறாமல் அதிகபட்சமாக இடம்பிடிப்பது கமல் பட பாடல்களாகத் தான் இருக்கும்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top