6 மாசமா காசே வரல.. கேப்டன் செஞ்ச உதவி! நியூஸ் ஆங்கர் சொன்ன தகவல்

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அனைவராலும் பெரிய அளவில் போற்றப்படும் நடிகராக உயர்ந்தவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். அவரை ஆரம்பத்தில் கருப்பு எம்.ஜி.ஆர் என்று கூட அழைத்து வந்தனர். எம்ஜிஆருக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருந்ததோ அது அப்படியே விஜயகாந்துக்கும் இருந்தது. ஏழை எளியவர்களிடம் அன்பாக பேசுவது பண்பாக பழகுவது அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது அவர்களை அப்படியே அரவணைப்பது என அடுத்த எம்ஜிஆரை பார்த்தது போல பார்க்கப்பட்டார் விஜயகாந்த்.

அது மட்டுமல்ல எம்ஜிஆரின் படங்களை பார்த்து அவருடைய குணாதிசயங்களை பார்த்தும் வளர்ந்தவர் தான் விஜயகாந்த். அவருடைய தீவிர ரசிகராகவும் இருந்திருக்கிறார். 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் இன்று வரை ஒரு நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் அவர் படங்களில் நடித்ததே கிடையாது.

அந்த அளவுக்கு தமிழ் மீது அதிக பற்று கொண்டவராகவும் இருந்துள்ளார். சினிமா மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் போராட்டத்திலும் கலந்து கொண்டு தன்னுடைய கனீர் குரலால் அந்தப் போராட்டத்தையே திறம்பட நடத்திக் காட்டியவர். நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து நடிகர் சங்கத்தின் பல கோடி கடன்களை தீர்த்தவர். அதன் பிறகு தான் அரசியலில் அடியெடுத்து வைத்து அதிலும் ஒரு பெரிய ஆளுமையாக விளங்கினார்.

அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஜெயலலிதா அம்மையாரையே புருவம் உயர்த்த வைத்தவர். இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி பிரபல நியூஸ் ஆங்கர் சுதாராஜேஷ் சில தகவல்களை கூறியிருக்கிறார் .சுதாராஜேஷை பொறுத்த வரைக்கும் செய்தி தொகுப்பாளினியாக வரவேண்டும் என தன் அக்கா மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அதற்கான பயிற்சிகளை எடுத்தார்.

முதலில் சன் டிவியில் தான் வாய்ப்புக்காக அலைந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக சன் டிவி நிறுவனத்தின் படி ஏறி இறங்கியிருக்கிறாராம். இருந்தாலும் அனுபவம் இல்லை என்று இவரை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கேப்டன் டிவியில் சேர்ந்திருக்கிறார். அங்கு போன பிறகு எடிட்டிங் என்றால் என்ன? வாய்ஸ் ஓவர் என்றால் என்ன என்பதையெல்லாம் பற்றி அறிந்து கொண்டாராம். ஏதாவது விஷேச நாள்கள் வந்துவிட்டால் விஜயகாந்தே நேராக அலுவலகத்திற்கு வந்து கிஃப்ட்ஸ் எல்லாம் கொடுப்பாராம். அதுவும் செக்யூரிட்டி முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் விஜயகாந்த்தான் கொடுப்பாராம். கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் எல்லாம் நின்று பொறுமையாக கொடுத்துவிட்டு போவாராம்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment