Connect with us

Cinema News

ஒரே படத்தில் ஹீரோ, வில்லன்! சாமர்த்தியமாக நடித்து அசத்திய அந்த ஹீரோ..

ஒரு படத்தை முழுவதுமாக தாங்கிக் கொண்டு இருப்பவர் யார் என்றால் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோதான். ஒட்டுமொத்த சுமையும் அந்த ஹீரோ மீது தான் இருக்கும். படம் நல்லா இருக்கிறதோ இல்லையோ படத்தின் மொத்த கதையையும் தாங்கிக் கொண்டிருப்பவர் ஹீரோவாகத்தான் இருப்பார். அதனால் எமோஷனல் காட்சிகளாகட்டும் ஆக்சன் காட்சிகள் ஆகட்டும் ரொமான்டிக் காட்சிகள் ஆகட்டும் எந்த ஒரு உணர்ச்சியையும் தத்ரூபமாக கொடுத்தால் மட்டுமே ஹீரோவை மக்கள் கொண்டாடுவார்கள் .ஹிரோவுக்கு இணையாக அடுத்து நாம் பார்த்து பிரமிப்பது வில்லன் கேரக்டர் தான் .

ஆரம்ப காலங்களில் அதாவது சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் .நிஜ வாழ்க்கையில் வில்லன் என்று சொல்லாமல் நமக்கு துரோகம் செய்தவர்கள் நம்மை பிடிக்காதவர்கள் இவர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். படத்தின் மூலமாகத்தான் வில்லன் என்ற ஒரு விஷயமே தெரிய ஆரம்பித்தது. குறிப்பாக நம்பியார் வீரப்பன் இவர்கள்தான் அந்தக் காலத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பேர் போனவர்கள் .திரையில் வந்து நின்றாலே பார்த்து பயப்படாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் நம்பியார் ஆகியோர் வாளை தூக்கி சண்டையிடும் போது பார்த்து ரசித்த ரசிகர்கள் எத்தனையோ பேர். நம்பியாரை திட்டி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்தை பெரிய அளவில் வெறுத்து இருக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக டாப் ஹீரோக்கள் ஒரு சில பேர் வில்லன்களாகவே இப்போது படங்களில் நடித்து வருகிறார்கள். அதில் நாம் முக்கியமானவராக பார்க்கப்படுவது விஜய் சேதுபதி. அதற்கு முன் ஒரு சில நடிகர்கள் அதாவது ஹீரோக்கள் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று இருந்தாலும் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

simbu

simbu

அதை சரியாக செய்தார் விஜய் சேதுபதி. அதற்கு அவருக்கு கிடைத்த பிரதிபலனும் கணக்கிட முடியாதது. ஹீரோவாக அவருக்கு கிடைத்த புகழை விட வில்லனாக நடித்து பெரும் புகழை பெற்றார். இந்த நிலையில் முன்னணி ஹீரோக்கள் ஒரு சில பேர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வில்லனாகவும் ஒரே படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்கள். அப்படி நடித்தவர்களில் யார் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் என்ற ஒரு விவாதம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .ஒரே படத்தில் ஹீரோ வில்லன் என்று நாம் பார்க்கும் பொழுது முதலில் நாம் மனதிற்கு தோன்றுவது அஜித் .

வாலி திரைப்படத்தில் அப்படி ஒரு நடிப்பை அஜித்திடமிருந்து யாரும் பார்த்திருக்க முடியாது. படம் முழுக்க பேசாமலேயே தன்னுடைய எக்ஸ்பிரஷன் மூலமாகவே வில்லத்தனத்தை காட்டி ரசிகர்களிடம் வெறுப்பையும் பாராட்டையும் பெற்றிருப்பார் அஜித். அடுத்ததாக ரஜினி .எந்திரன் படத்தில் ஹீரோ வில்லன் என நடித்து அந்த ஆண்டிற்கான சிறந்த வில்லன் விருதை பெற்றார் ரஜினி. அவருடைய வில்லன் கதாபாத்திரத்தையும் மக்கள் ரசித்தார்கள்.

அதேபோல அழகிய தமிழ் மகன் படத்தில் முதன்முதலாக விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதில் சூர்யாவும் அடக்கம். 24 படத்தில் வில்லனாக நடித்து பிரமாதப்படுத்தி இருப்பார் சூர்யா. அதில் ஹீரோவாகவும் அவர் நடித்திருப்பார். சிம்புவும் இந்த லிஸ்டில் இருக்கிறார் .மன்மதன் படத்தில் ஹீரோ வில்லன் என ஒரே படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு .

vijay

vijay

அதில் பெண்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பல பேரின் வெறுப்பையும் சம்பாதித்தார் .ஒரு கதாபாத்திரத்தை பார்த்து வெறுப்பு அதிகமாக வருகிறது என்றால் அதுதான் அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என கருதலாம். அப்படித்தான் மேலே குறிப்பிட்ட நடிகர்களின் வில்லன் கதாபாத்திரமும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றன.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top