Connect with us

Cinema News

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவோட ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கு? ரிலாக்ஸா இருப்பது யார்?

போதைப்பொருளைக் கையாண்டு சிறைக்குச் சென்ற நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா பற்றிய செய்தி தான் இப்போது தீப்பொறியாக பரவி வருகிறது. இன்னும் எத்தனை பேர் வலையில் சிக்காமல் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

கிருஷ்ணாவுக்கு 2வது கல்யாணம் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் நடந்தது. இப்போ அவரு மாமியார் வீட்ல இருக்காருன்னு கிண்டல் அடிக்கிறாங்க. ஜெயில்ல இருக்காரு. ஸ்ரீகாந்த் முதல் நாள் தான் பதற்றமா இருந்தாரு. மறுநாள்ல இருந்து கொஞ்சம் ஃப்ரீயா ஆகிட்டாரு. பேப்பர், புக் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாரு. முதல் நாள் ரொம்ப ஃபீல் பண்ணினாராம்.

‘ஜெயில்ல வந்து இப்படி சிக்கிட்டோமே… எப்போ வெளியே வருவோம்’னு மனக்குழப்பம் வருவது இயல்புதான். அது இந்த இருவருக்குமே வந்தது. ரெண்டுபேருமே நல்ல குடும்பத்துல இருந்து வந்தவங்க. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் சந்திக்க அனுமதி கொடுக்கப்படவில்லையாம். கிருஷ்ணாவுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனை, இதயத்துடிப்பு வேகமா இருக்குறதுன்னு உடல் ரீதியா சில பிரச்சனைகள் இருக்கு.

கிருஷ்ணா எல்லாத்தையும் மனசுல நினைச்சிக்கிட்டு கொஞ்சம் மன அழுத்தமா இருக்குறதா சொல்றாங்க. ஸ்ரீகாந்த் ஜெயில்ல கொடுக்குறதை சாப்பிட்டுக்கிட்டு கஷ்டம் உள்ளுக்குள்ள இருந்தா கூட ஜெயிலோட இயல்பு வாழ்க்கைக்கு அவர் வந்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

என்ன தான் பணம், காசு, பேர், புகழ்னு சம்பாதிச்சி வச்சிருந்தாலும் ஜெயிலுக்குப் போனா அவங்க லைஃப்ல அது கரும்புள்ளியாகத் தான் தெரியும். அவ்வளவு நாள் சம்பாதிச்ச நற்பெயருக்கு அது களங்கத்தை உண்டாக்கிடும். அதுல இருந்து மீண்டு வர்றது சாதாரண விஷயமல்ல. மனத்திடமும், பக்குவமும், வைராக்கியமும், தன்னம்பிக்கையும் வேணும். அப்படி இருந்தால் மட்டும்தான் மீண்டு வந்து இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

மீண்டும் தவறுகள் நடக்காதவாறு நம்மை வழிநடத்தவும் முடியும். ஸ்ரீகாந்த், கிருஷ்ணா நல்ல நடிகர்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் இதுபோன்ற பழக்கங்களுக்கு எப்படி அடிமையானார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகவே உள்ளது. இனியாவது திருந்தி மீண்டு வருவார்களா என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top