Connect with us

Cinema News

அது சும்மா டிரெய்லர்.. இனிமேதான் இருக்கு! சிம்பு படம் குறித்து வெற்றிமாறன் கொடுத்த மாஸ் அப்டேட்

சிம்பு வெற்றிமாறன் படம் ஒரு வழியாக முடிவாகிவிட்டது. சிம்புவின் 49வது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்த நிலையில் அந்தப் படம் தற்போதைக்கு டிராப் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் சிம்புவின் 49வது படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடி வாசல் திரைப்படத்தை இயக்க போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

அந்த படமும் சில பல சிக்கல்களில் இருந்ததனால் இப்போது சிம்பு வெற்றிமாறன் கூட்டணிதான் முடிவாகியிருக்கிறது. இது வடசென்னை படமாக இருக்குமா என்று கேட்டு வந்த நிலையில் வடசென்னை கதைகளத்தில் விசாரணை போன்ற மாதிரியான திரைப்படமாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி,கிஷோர் என வடசென்னை படத்தில் இருந்தவர்களும் இதில் நடிக்க போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. அந்த வீடியோவில் சிம்பு பின்னாடி கை கட்டி கட்டம் போட்ட சட்டை லுங்கியுடன் இருப்பதை போல் படமாக்கியிருந்தார்கள். சிம்புவின் அருகில் நெல்சனும் இருந்தார். அதனால் நெல்சனும் இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் கவின், மணிகண்டன் போன்றோர்களும் படத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 4 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறார்களாம். படத்தை பற்றி பல விஷயங்கள் இப்போதிலிருந்தே சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.

இதை பற்றி மேலும் கூறிய வெற்றிமாறன் முதலில் வெளியான வீடியோ வெறும் announcement வீடியோதான். அடுத்து டைட்டில் வீடியோ இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top