Connect with us

Cinema News

என்ஓசியா? அப்போ 20 கோடி.. தனுஷ் வெற்றிமாறன் இடையே இப்படியொரு டீலிங்கா?

சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகின்றது. இது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமா இருக்குமோ என்ற கேள்விதான் இப்போது அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. ஆனால் வடசென்னை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தனுஷை வைத்துதான் எடுப்பார் என்று கோலிவுட்டில் திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். ஆனால் சிம்புவை வைத்து எடுக்கும் படம் வடசென்னை படத்தின் சாயல் போல இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதனால் தனுஷிடம் என்.ஓ.சி வாங்க வெற்றிமாறன் தனுஷை சந்திப்பதற்காக மும்பை செல்ல இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஏனெனில் தனுஷ் ஹிந்தியில் படத்தில் பிஸியாக இருப்பதால் மும்பையில் இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இன்று வலைப்பேச்சில் இந்த விஷயத்தை பற்றி கூறும் போது தனுஷ் என். ஓ.சி கொடுக்க சரி என்று சொல்லிவிட்டார்.

அதே சமயம் வெற்றிமாறனிடம் ‘ நீங்க என்ன வேண்டுமானாலும் வடசென்னையில் இருந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் உங்க ப்ரொடியூசர்கிட்ட சொல்லி நம்ம அக்கவுண்டுக்கு ஒரு 20 கோடி அனுப்பி வைக்க சொல்லுங்கள்’ என சொன்னதாக வலைப்பேச்சில் இன்று பேசியிருக்கிறார்கள். உடனே கடுப்பான வெற்றிமாறன் சிம்புவை வைத்து எடுப்பதாக இருந்த அந்த கதையில் இப்போது மாற்றம் செய்து வருவதாக கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் தனுஷ் தரப்பில் விசாரிக்கும் போது வெற்றிமாறன் எங்கு கையெழுத்து போட சொன்னாலும் தனுஷ் கையெழுத்துபோட தயாராகத்தான் இருக்கிறாராம். இதை தனுஷ் அவரது மேலாளரிடமே சொல்லிவிட்டாராம். அதுவும் போக இப்படி ஒரு சந்திப்பு நடந்த மாதிரியே தனுஷ் தரப்பில் சொல்லவில்லையாம்.

என்ன இருந்தாலும் படம் வரும் போது தெரிந்துவிடும். கதையில் மாற்றம் இருந்தால் தனுஷ் 20கோடி கேட்டார் என்று வைத்துக் கொள்ளலாம். அதே கதைதான் என்றால் தனுஷ் தரப்பில் 20கோடி கேட்கவில்லை என்று வைத்துக் கொள்ளலாம் என வலைப்பேச்சில் இன்று பேசியிருக்கிறார்கள் .

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top