Connect with us

ஸ்ரீகாந்துக்கு கொடுக்கப்பட்டது மட்டமான பொருள்… சுசித்ரா சொல்லும் அப்பட்டமான தகவல்கள்!

latest news

ஸ்ரீகாந்துக்கு கொடுக்கப்பட்டது மட்டமான பொருள்… சுசித்ரா சொல்லும் அப்பட்டமான தகவல்கள்!

போ..தைப்பொருள் பயன்படுத்தியதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய நடிகர்கள் சிறைவாசம் செய்து வருகின்றனர். இதற்குப் பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா இதுகுறித்து பல தகவல்களை ஒரு யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

இப்போ வலைவீசி தேடுறாங்க. எதிரிக ஒரு சின்ன மீனைப் போட்டு இந்தா வச்சிக்கன்னு சொல்வாங்க. மீனு கிடைச்சிடுச்சுப்பான்னு போயிடுவாங்க. பம்பாய் போலீஸ் எப்படி? ரியா சக்கரவர்த்தியை பிடிச்சதும் அவங்களை வச்சே டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்கலாம்.

யாராவது எதாவது ஓப்பன் பண்றாங்களா பிடி ரியா சக்கரவர்த்தியை…ன்னு சொல்வாங்க. அதே மாதிரி ராகுல் ப்ரீத்தி சிங்கை 2 மணி நேரத்துல விசாரிச்சி முடிச்சிட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் டெஸ்ட், ஹவுஸ் சர்ச் கிடையாது. இன்ட்ராகேஷன்னு சொல்வோம்மா. காபி, டீ வேணுமான்னு கேட்டு கொடுப்பாங்க. வெளியே பிரஸ்ல போய் பயங்கரமா காய்ச்சி எடுத்துட்டாங்கன்னு சொல்லுங்கன்னு அனுப்புவாங்க.

இந்த ஸ்கெட்ச் கிருஷ்ணாவோடு செய்யப்படுது. ஸ்ரீகாந்த் யாருக்குமே நண்பர் இல்லை. காக்கிச்சட்டை போட்டவனுக்கு சுயமரியாதை இல்லை. ஸ்ரீகாந்தை போட்டோ எடுக்க ஒவ்வொரு ஜார்னலிஸ்டும் போலீஸ்சுக்கு ஒரு தொகையைக் கொடுக்குறாங்க. ஸ்ரீகாந்தை டீலர்னு பெயிண்ட் பண்ணப் பார்க்குறாங்க. அவரு டீலர் கிடையாது.

கன்ஸ்யூமர். பாவம் மட்டமான பொருளை கொடுத்து மோசமான அடிக்ட் ஆக்கி வச்சிட்டாங்க. என் நண்பர்களுக்கு 65 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தார்கள். இந்த லூசர்களுக்கு எல்லாம் 12 ஆயிரம் ரூபாய்க்கு சப்ளை பண்றாங்க.

அவருதான் காக்டெய்ல் லீடர் தமிழ்நாட்டுலன்னு சொல்லும் சுசித்ரா புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து பொட்டலம் கட்டுறாங்க என்கிறார். ஆனா அவங்க யாருன்னு சொல்லவில்லை. அதே போல ஒரு இசை அமைப்பாளரையும் பேரு சொல்லாம குறிப்பிடுகிறார். இப்படி பல தகவல்களை அந்தப் பேட்டியில் அடுக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானபோது அவருக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். ஆனால் இப்போது அவர்களே இன்று நம்ம தலைவி அன்னைக்கே சொல்லிட்டாங்களேன்னு கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top