பெண்களுடன் தொடர்பு?!.. விட்டுச் சென்ற மனைவி!.. மன உளைச்சலில் தவிக்கும் ஸ்ரீகாந்த்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Actor Srikanth: மாடலிங் துறையில் இருந்த ஸ்ரீகாந்த் சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜாக்கூட்டம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ‘அட அழகாக இருக்கிறாரே’ என ரசிகர்கள் நினைக்க படம் நன்றாக ஓடியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். பம்பரக்கண்ணாலே, ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், ஜூட், போஸ், கனா கண்டேன், பூ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓடவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார். சில மாதங்களுக்கு முன்பு கூட தினசரி படம் வெளியானது. இந்த படமும் ஓடவில்லை.

இந்நிலையில்தான் போ…தை மருந்தை பயன்படுத்தி இப்போது சிறையில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீகாந்துக்கு இந்த பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. சினிமாவில் நடித்ததற்காக 10 லட்சம் சம்பள பாக்கியை கேட்டபோது அதற்கு பதிலாக போ…தை பொருட்களை கொடுத்து பழக்கிவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தார். இவருக்கு பின் இவரின் நடிகர் கிருஷ்ணாவும் கைதாகி இருக்கிறார்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ‘குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது. என் மகனை பார்த்துக்கொள்ள வேண்டும்’ என ஸ்ரீகாந்த் சொல்லியிருக்கிறார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதற்கான காரணம் வெளியே கசிந்திருக்கிறது. ஸ்ரீகாந்த் நட்சத்திர ஹோட்டல்களுக்கு பார்ட்டிக்கு சென்றபோதுதான் அவருக்கு வந்தானாவுடன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வந்தனா ஸ்ரீகாந்தை விட பல மடங்கு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் அப்பாவுக்கு சில கல்லூரிகளும், பள்ளிகளும் இருக்கிறது.

வந்தானவை ஸ்ரீகாந்த் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது வந்தனா மீது காவல் நிலையத்தில் இருந்த புகார் காரணமாக திருமணம் செய்ய மறுத்தார். ஆனால், வந்தனாவோ ஸ்ரீகாந்தை விடுவதாக இல்லை. ஸ்ரீகாந்தின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். எனவே, அவரை திருமணம் செய்தார் ஸ்ரீகாந்த். ஒரு மகன், மகள் என குடும்ப வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.

இந்நிலையில், சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் ஸ்ரீகாந்த். அதில்தான் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு கொக்கன் போதைப்பொருளை பயன்படுத்திருயிருக்கிறார். அதோடு, அவருக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளை ஸ்ரீகாந்துடன் விட்டுவிட்டு அவரின் மனைவி வந்தனா அவரின் பெற்றோர் வீட்டிக்கே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால்தான், சிறையில் இதுவரை ஸ்ரீகாந்தை சென்று யாருமே பார்க்கவில்லை என்கிறார்கள். மகனை ஸ்ரீகாந்தே கவனித்து வந்திருக்கிறார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார் ஜாமீனுக்காக விண்ணப்பித்திருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment