Connect with us

Cinema News

அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால் என ஏகப்பட்ட கேமியோ கைகொடுத்ததா/.. கண்ணப்பா விமர்சனம் இதோ!..

மகாபாரதம் சீரியலை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கண்ணப்பா படத்தில், நடிகர்களுக்கு சமமாக ஒரு டஜன் கேமியோ ரோலில் ஏகப்பட்ட பிரபலங்களையும் பிடித்து போட்டு படத்தை தேற்றியிருக்கின்றனர்.

அக்‌ஷய் குமார் சிவனாகவும் காஜல் அகர்வால் பார்வதி தேவியாகவும் நடித்துள்ள நிலையில், மோகன்லால் மற்றும் பிரபாஸ் சிவனின் அவதாரங்களாகவே வருகின்றனர்.

காலஹத்தி கோயில் சர்ப தோஷ பரிகாரங்களுக்கு பிரசித்தி பெற்ற தலமாகும். அந்த கோயிலில் முதல் பூஜை சிவனுக்கு பதிலாக மலை மேல் இருக்கும் கண்ணப்ப நாயனாருக்குத்தான் செய்வார்கள். அந்த கண்ணப்ப நாயனாரின் கதையுடன் படத்துக்காக சில கற்பனைகளையும் கலந்து கிண்டி எடுத்துள்ள படமாகவே கண்ணப்பா வெளியாகி இருக்கிறது.

மூலக் கதையான கண்ணப்பா கதையை மட்டும் வைத்துக் கொண்டு கிரிஸ்ப்பாக படத்தை 2 மணி நேரத்துக்குள் எடுத்திருந்தால் சிறப்பாகவே இருந்திருக்கும். ஆனால், புதுசா ஒரு கதை சொல்கிறேன் என்கிற தொனியில் படத்தை கொஞ்சம் இல்லை ரொம்பவே ஒரு மணி நேரம் லெந்தாக நீட்டியது தான் ரசிகர்களை முதல் பாதி முழுக்க சீட்டிலேயே உட்கார முடியாமல் படுத்தி எடுத்துவிட்டது.

முதல் பாதியில் இடைவேளைக்கு முன்பாக மோகன்லால் வரும் காட்சியில் இருந்து பிக்கப் ஆகும் படம் கடைசி வரை ரசிகர்களை கட்டிப் போட்டு விடுவதால் பாஸ் மார்க் வாங்குகிறது.

ஆரம்பத்தில், என்னடா கங்குவா படம் ஓடுகிறது என்பது போலவே படம் நகர்கிறது. பக்கத்து ஊர்களை ஒன்றாக திரட்டி படையோடு வரும் எதிரியை வீழ்த்த நினைக்கும் திண்ணா ப்ரீத்தி முகுந்தனை பார்த்து காதலில் விழ அந்த ரொமான்ஸ் காட்சிகள், பாடல் காட்சிகள் என என்னடா சாமி படம் வேற ரூட்டில் போகிறதே என்கிற உணர்வு எழத்தான் செய்கிறது.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அதற்கு பிரேக் போட்டு, கதைக்குள் டாப் கியரில் சென்று ஒருவழியாக சொல்ல வந்ததை சொல்லி முடித்துள்ளனர்.

கண்ணப்பா – கடவுள் இருக்கான்ப்பா!

ரேட்டிங்: 2.5/5.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top