Maargan review: திரைக்கதை மோசம்… மார்கனின் கதி என்ன? விஜய் ஆண்டனிக்கு பிக்கப் ஆகுமா? ஆகாதா?

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் கிரைம் திரில்லர் படம் மார்கன் இன்று விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். லியோ ஜோன் பால் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, பிரிகிடா, அஜய் தீக்ஷன், தீபாஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஒரு பொண்ணு ரோட்டுல நடந்து போகும்போது மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணின் முதுகில் ஒரு ஊசியைக் குத்தி விடுகிறார். அதனால் அவரது உடல் முழுவதும் கருப்பாகி விடுகிறது. தொடர்ந்து அவரும் இழந்து விடுகிறார். விஜய் ஆண்டனி இதை ஆய்வு செய்ய வருகிறார். அவருக்கும் ஒரு கதை உள்ளது. அவரது மகள் இறந்ததால அவர் ரெஸ்ட்ல இருக்கிறார். அவரும் அந்த ஊசியால் பாதி உடல் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் அந்த கேஸை எடுத்து சென்னையில் இருந்து ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறார். அப்போது சந்தேகக் கண்ணோட்டத்துடன் ஒருவனைப் பார்க்கிறார். எல்லாத்துக்கும் காரணம் அவன்தானா? அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

விஜய் ஆண்டனியின் அக்கா பையன் அஜய் தீட்சன் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தை சைக்கோ திரில்லர் மாதிரி கொண்டு வந்திருக்கலாம். படத்தில் தப்பு பண்ணினவனைத் தண்டிக்காமல் தப்பு பண்ணக் காரணமாக இருந்தவர்களைத் தண்டிப்பாங்க.

ராட்சசன் டெம்ப்ளேட்லயே பாக்ஸ் ஸ்டோரியை சொல்லி இருக்கலாம். ஐடியாலஜி, சூப்பர் நேச்சுரல் என எல்லாமே அபாரம். இந்த மாதிரி படத்துல பர்ஸ்ட் ஆஃப் கண்ணா பின்னான்னுதான் போகும். அதுக்கு அப்புறம்தான் முடிச்சுகளை அவிழ்த்து விடுவாங்க. ஆனா இந்தப் படத்துல கடைசி வரைக்குமே முடிச்சை அவிழ்த்து விடாம கடைசில அவிழ்த்தது வீணான வேலை.

போலீஸ் இன்வஸ்டிகேஷன் பண்றதுல சிச்சுவேஷன்தான் தேடி வருது. இவங்க தேடிப் போகல. சுவாரசியமா ராட்சசன்ல உள்ள மாதிரி சீன் அமையல. இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். மக்களுக்குபுரியுற மாதிரி லெவன் மாதிரி கொடுத்துருக்கலாம். இது ஒரு ஆவரேஜ் படம்தான்.

நல்லா சொல்ல வேண்டிய படம் சொல்லத் தவறியுள்ளது. மொத்தத்தில் மார்கன் ஆவரேஜ் படம்தான் என்கின்றனர். ஆனால் சில படங்கள் போகப் போகப் பிக்கப் ஆகும். விஜய் ஆன்டனிக்கு எப்படி என பொறுத்திருந்து பார்ப்போம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment