Connect with us

Cinema News

யாருக்கும் வணங்கான்.. இவருக்காக கால்ல விழுகுறேனு சொல்றாரே! பாலாவா இப்படி?

மிர்ச்சி சிவா நடிப்பில் வரும் ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகக் கூடிய திரைப்படம் பறந்து போ. இந்தப் படத்தை இயக்குனர் ராம் இயக்கியிருக்கிறார். படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படமாக இந்த பறந்து போ திரைப்படம் அமைந்திருக்கிறது. ஏற்கெனவே தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் அந்த ஆழமான அன்பை தங்க மீன்கள் படத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தார் ராம்.

அது தன் மகளுக்காக எடுத்த படம் என்றும் இந்த பறந்து போ திரைப்படம் தன் மகனுக்காக எடுத்த படம் என்றும் இயக்குனர் ராம் கூறினார். பொதுவாக அப்பாக்களை பொறுத்தவரைக்கும் மகளுக்காக ஒரு வீடு மகனுக்காக ஒரு வீடு என்று சொத்தைத்தான் சேர்த்து வைப்பார்கள். ஆனால் ராமை பொறுத்தவரைக்கும் தன் படங்களை பிள்ளைகளுக்காக சமர்ப்பிக்கிறார்.

பறந்து போ திரைப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகினரை சார்ந்த பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். பாலா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன், மிஷ்கின் என பல பேர் கலந்து கொண்டனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் பாலுமகேந்திராவின் மாணவர்கள்தான் வெற்றிமாறன், பாலா மற்றும் ராம்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு மூவரும் ஒரே மேடையில் சந்திக்கிறார்கள் என்றால் அது பறந்து போ விழா மேடைதான். வெற்றிமாறன், பாலா, ராம் ஆகிய மூவரும் ஒன்றாக ஒரே மேடையில் நின்றது அனைவருக்கும் பெரும் ஆச்சரியமாக இருந்தது அதே நேரம் பாலுமகேந்திராவின் மாணவர்கள் என அனைவரும் பிரமிப்பாக பார்த்தார்கள். அப்போது பாலா படத்தை பார்த்து மிகவும் உருக்கமாக பேசினார்.

திரைவிமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து இந்தப் படத்தை மக்கள் மத்தியில் நல்ல விதத்தில் கொண்டு போக வேண்டும். உங்களின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். படத்தை பற்றி நல்ல விதத்தில் எழுதி நல்ல படியாக கொண்டு போய் சேருங்கள். அந்தளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. படம் பார்த்து எனக்கே கண்களில் கண்ணீர் வந்து விட்டது என்று படத்தை பற்றி பேசினார் பாலா.

paranhupo

paranhupo

பொதுவாக ராம் படம் என்றாலே கொஞ்சம் கமெர்ஷியல் மற்றும் கிளாசிக் படமாக இருக்கும். பெரும்பாலும் காமெடிக்கு இடம் இருக்காது. ஆனால் மிர்ச்சி சிவா முழுக்க முழுக்க காமெடி பண்ணுகிறவர். அவரை வைத்து எப்படிப்பட்ட படத்தை கொடுக்கப் போகிறார் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இது மிர்ச்சி சிவாவை வைத்து முழுக்க ராம் படமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். காமெடியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மிர்ச்சி சிவாவுக்கும் இந்தப் படம் புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top