சின்னதா ஒரு படம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Published on: August 8, 2025
---Advertisement---

விளம்பர திரைப்படங்கள் பல எடுத்த அனுபவம் உள்ள இயக்குனரும், விஜய் தொலைக்காட்சியி ந் விளம்பர இயக்குனரான ஜானி டிசோசா இயக்கியுள்ள முதல் படம் சின்னதா ஒரு படம். வித்யாசமான இந்த தலைப்பு உள்ள இந்த படத்தில் விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி நடித்துள்ளனர். முக்கிய சிறப்பு தோற்றத்தில்

சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன் நடித்துள்ளனர்.

திருச்சித்திரம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது. இதனை முன்னணி நடிகர் சிவகாகர்த்திகேயன் வெளியிட்டார். சிவகார்த்திகேயன் ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் நடைந்து வரும் இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.

Leave a Comment