Connect with us

latest news

ராமின் ‘பறந்து போ’ டிரெய்லர் வந்துடுச்சு!.. அகில உலக சூப்பர் ஸ்டார் டான்ஸையே வச்சு செஞ்சிட்டாரே!..

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடித்த ஏழு கடல் ஏழு மலை படம் வெளியாகும் என காத்திருந்து ஏமாந்து போன ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக மிர்ச்சி சிவாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படம் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சற்றுமுன் அதன் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என இயக்குனர் ராம் இயக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமாகவும் மனிதர்களின் ஆழமான உணர்ச்சிகளை வெளிகொண்டு வரும் விதமாகவும் இருந்து வருகின்றன.

தொடர்ந்து ராமின் படங்களில் அஞ்சலி நடித்து வரும் நிலையில், ஏழு கடல் ஏழு மலை படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அஞ்சலி நடித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக மாறிய நிலையில், அதே போல நகைச்சுவை நடிகரான மிர்ச்சி சிவாவை வைத்து இப்படியொரு தரமான படத்தை ராம் இயக்கியுள்ளார்.

குழந்தைகள் முன்பாக வெற்றி பெற்றவராக நிரூபிக்கப் போராடும் அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும் இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன் என தங்க மீன்கள் படத்தைத் தொடர்ந்து மீண்டும் குழந்தைகளின் உலகத்துக்குள் சென்று ஒரு ஆழமான கதையை உருவாக்கியுள்ளார்.

மலையாளத்தில் மம்மூட்டியையே தனது நடிப்பால் மிரள விட்ட கிரேஸ் ஆண்டனி இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவருடைய முன்னாள் காதலியாக அஞ்சலி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியானின் நடிப்பு மற்றும் அவன் கேட்கும் கேள்விகள் என அனைத்துமே டிரெய்லரையே வெற்றிப் படமாக மாற்றிவிட்டது.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top