
Flashback
நாகேஷூடன் மோத சரியான ஆள் அவருதானாம்…! நூத்துல ஒருத்தருக்குத்தான் அந்த யோகம் அடிச்சிருக்கு!
தமிழ்த்திரை உலகில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலர் உண்டு. அவர்களில் டயலாக்கே பேசாமல் சிரிக்க வைப்பவர்கள் ஒரு சிலர்தான் உண்டு. அவர்களில் ஒருவர்தான் நாகேஷ். அவர் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் வந்து நின்றாலே போதும். நமக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிடும். எல்லாமே பாடி லாங்குவேஜ்தான். கண்ணை உருட்டுவதும், அங்கும் இங்குமாக ஓடுவதும், துள்ளிக் குதிப்பதும் பார்க்கவே சுவாரசியமாக இருக்கும்.
பேசிவிட்டு அவர் போகிற போக்கில் சொல்லும் காமெடி எல்லாம் படுதமாஷாக இருக்கும். அவரு என்ன மனுஷன்யா… அவ்ளோ சூப்பரா பர்பார்மன்ஸ் பண்றாருன்னு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரே அடிக்கடி பாராட்டுவாராம். அவர் கமல், ரஜினியிடம் அடிக்கடி நாகேஷ்னு ஒரு நடிகன் இருக்கான் போய் பாருங்க. அவனைப் பார்த்து கொஞ்சமாவது நடிங்கன்னு சொல்வாராம். நீர்க்குமிழி, எதிர்நீச்சல்;னு பாலசந்தரின் படங்களில் நடித்துள்ளார் நாகேஷ். எல்லாமே ஹீரோதான். அசத்தி இருப்பார்.
திருவிளையாடல் படத்தில் சிவாஜிக்கே டஃப் கொடுத்தவர் நாகேஷ். தருமியாக வரும் சீன்ல அவர் பேசும் டயலாக்குகளும், பாடி லாங்குவேஜூம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்தக் கேரக்டருக்கு அவரை விட்டா வேற சான்ஸே இல்லை. அப்படிப்பட்டவர் சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்கும்போது அவருடன் மோதுவதற்கு ஒரு சரியான ஆள் கிடைக்கவில்லையாம். அதற்கு தகுந்த நபரை தேர்வு செய்ததே சுவாரசியமான விஷயம். அதில் தேர்வானவர்தான் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். அவர் எப்படி தேர்வானார் என்பதை அவரே சொல்லக் கேட்போமே…

nagesh ss chandran
சர்வர் சுந்தரம் படத்துல நாகேஷ் கூட மோதணும். அந்தக் காட்சிக்கு ஆள் வேணும்னு சொன்னாங்க. 100 பேர் தேர்வு செஞ்சாங்க. அவர்கள்ல 25 பேர் தேர்வு ஆனோம். அவர்களில் 10 பேர், கடைசியா 5 பேர்னு தேர்வு செஞ்சாங்க. அந்த 5 பேர்ல ஒருவராகத்தான் என்னைத் தேர்வு செஞ்சாங்க.
அப்படித்தான் சர்வர் சுந்தரம் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு முறை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மறைந்த நடிகர் எஸ்எஸ்.சந்திரன். 1964ல் எஸ்.பஞ்சு இயக்கத்தில் நாகேஷ் நடித்த படம் சர்வர் சுந்தரம். ஹீரோவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் நாகேஷ். மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் இன்று வரை பேசப்படுகிறது.