‘கூலி’ மானம் இப்படி பறக்குதே! ரிலீஸுக்கு முன்பே சேட்டையை ஆரம்பித்த புளூசட்டை மாறன்

Published on: August 8, 2025
---Advertisement---

ரஜினியின் நடிப்பில் அடுத்து அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு பெரிய கேங்ஸ்டர் திரைப்படமாக இது வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பேன் இந்திய படமாகவும் இது வெளிவர இருக்கிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் இசையில் டி. ஆர் குரலில் நேற்று வெளியான அந்த பாடல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் தேவா என்ற கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகிறது. அதனால் படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே மீடியாக்களின் கவனம் அந்த படத்தின் மீதுதான் திரும்பும். படத்தை பற்றி பெரிய அளவில் பேசி டிரெண்டிங்காக்கி விடுவார்கள்.அப்படித்தான் கூலி படத்திற்கும் பில்டப்பை ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல திரை விமர்சகர் புளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கூலி படத்தை பற்றி எப்படியெல்லாம் thumn nail வெளியானது என லிஸ்ட் அவுட் வைத்திருக்கிறார் புளூ சட்டை மாறன்.

‘முதல் பாதியை பார்த்து அசந்துபோன ரஜினி’, ‘ சூப்பர் கண்ணா சூப்பர் என லோகேஷை பாராட்டினார் ரஜினி’, ‘ தன் படத்தை தானே பாராட்டிய சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை’, ‘ தமிழில் முதல் 1,000 கோடி படம் கூலி’, ‘ ரிலீஸ்க்கு முன்பே 1,000 கோடி பிசினஸ். அசந்து போன திரையுலகம்’, ‘ ஆந்திரா, கேரளா மற்றும் ஹிந்தியில் வரலாறு காணாத பிசினஸ் சாதனை’, ‘உலகளவில் விஜய் படங்களின் வியாபாரத்தை முறியடித்த கூலி’, ‘ரஜினி சாருடன் நடித்தது நான் செய்த புண்ணியம். அமீர்கான் பேட்டி’ என கூலி படத்தை பற்றி வெளியான சில தகவல்களை லிஸ்ட் அவுட் செய்திருக்கிறார்.

coolie_ rajini

coolie_ rajini

இதை பார்த்ததும் நெட்டிசன்கள் படத்தை பார்த்து தங்க நாணயம் வழங்கினாரா ரஜினி என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். அது மட்டுமில்ல இந்த thumb nail எல்லாம் பார்க்கும் போது பாசிட்டிவான thumb nail ஆக இருப்பதால் முதன் முறையாக படத்தை பார்த்து புளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தார் என்றும் கூறி வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment